பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 முனிவர் பின் சென்ற மூதறிவாட்டி அவ்வம்மையார் அவ்வாறு ஒழுகிற்றலர் என்பது உணர்ந்து பின்பு மனந்தேறிக் கணவனரைப் பார்த்து, * அன்பரே ! கடிமணம் புரிந்த அன்றே என்றன் ஆவி யும் உடலும் எல்லாம் உமக்கே உரிமையாக்கினேன். ஆதலின், நீர் இவ்வாறு மொழிவதால் இன்று எனக்கு இடையூறு உண்டோ ? நன்றே செய்வீர் பிழை செய்வீர் நானே இதற்கு நாயகமே என்று கூறித் தம் தனிப் பெருங் கணவனரை வணங்கினர். இயற் பகையாரும் எதிர் வணங்கினர். என்னே மனைவி யார் வணங்கல் பொருத்தமே. கணவருைம் எதிர் வணங்கல் சால்புடையதாமோ ? என்று காம் எண் ணவும்கூடும். இயற்பகையார் வணங்கியது சாலவும் தக்கதேயாம். ஏன்? இனி அவ்வம்மையார் தம் உடைமைப் பொருள் அல்லர். முனிவர் தம் கிளைஞர் ஆயினர். அவ்வாறு இருக்க இயற்பகையார் வணங் கியதால் தவறு யாதுளது? கணவனுரை விட்டு நீங்கிய காரிகையார் ஆண் டிருந்த மாதவனர் சேவடியைச் சென்று பணிந்து நின்ருர். பணிதற்குமுன் சிறிது திகைத்துப்போர்ை. வந்த மாதவர் ' கனல் வாதை.வந்தெய்தின், உதிர் சருகு கந்த மூலங்கள் உண்டு வாழும் இயல்புடையவர், ஒர் இல்லறத்தார் இல்லக்கிழத்தியாரை இரங்தது ஏனே; ' என்னும் எண்ணமே இவ்வம்மையாரைச் சிறிது திகைக்கச்செய்த தென்க. மாதவனர் மங்கையாரை ஏற்றுக்கொண்டார். ஏற்றதும் வீட்டைவிட்டு ஏகாதிருந்தனர். இயற் பகையார், முனிவரே, இன்னமும் ஏதேனும் யான் செய்யவேண்டி இருப்பின், பணிமின் ; சிரமேற் கொண்டு செய்து முடிக்கிறேன்' என்ருர். இவரை,