பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தி கூறிய உத்தமி 113 இடம் பெருதவராய்ப் பொதுமக்கள் என்னும் பெயர் அளவில் நிற்பர். ஒருவர் பெரியர் ஆதற்கும் சிறியர் ஆதற்கும், அவர் அவர் செயல்களே சிறந்த காரணங் கள் ஆகும். 'தன்னைத் தலையாகச் செய்வானும்தான்' என்று தமிழ் நூல் சாற்றுவது இக்கருத்தைப் பற் றியே ஆகும். அரிய செயலே மக்கள் ஆற்ற முற்படுகை யில் அரிய சோதனைகளும் ஏற்படும். அக் காலத்திலும் மனம் தளரல்கூடாது. தளர்ச்சியைக் கொடுக்க இயற் கைச் சூழலும் இடங்கொடுக்கும். அக்காலங்களில் நெறி தவரு மக்கள் அதனேயும் எதிர்த்துத் தம் கொள்கையை நிலைநிறுத்துவரேல் நில உலகில் நீடு பயன் எய்துவர். இத்தகைய சோதனைக் காலம் மாறனர்க்கு நேர்ந் தது. இவரது செல்வம் மெல்ல மறைந்து, இவர்க்கு அல்லல் நல்குரவும் அடைந்தது. இதனைக் கவி கூறுகையில் செல்வம் மேவிய நாளில் இச் செயல் செய்வதன்றியும் மெய்யில்ை, அல்லல் நல்குரவு ஆன போதிலும் வல்லர் என்று அறிவிக்கவே, ஒல்லையில் வறுமைப்பதம்’ வந்ததாகக் கூறுகிருர். அறிஞர்பால் அமைந்த வறுமையாதலின் கவி அதனையும் ஒரு பதவி போல் அவர்கள் கருதுவார் என்பதைக் காட்டுவார் போல வறுமைப் பதம்’ என்று கூறியது ஆழ நினைந்து அதன் பொருளே கன்கு அனுபவிக்கவேண் டிய தொன்ருகும். மாறனர் வளஞ் சுருங்கினும் மனஞ் சுருங்குதல் இலராய் அற்ருர் அழிபசியைத் தம்மால் கூடிய முறையில் தீர்த்து வந்தார். வறுமைநோய் உழந்த வள்ளலாம் மாறனர் தாம் இருக்க வீடும், விதைக்கச் சிறு கிலனும் தவிர்த்து ஏனைய செல்வங்கள் யாவும் இழந்து வாழ்நாளில் 8