பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. நம்பிக் குகந்த நங்கைமார் (1. பரவையார்) கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும். மான் வயிற்றில் ஒள் அரிதாரம் பிறக்கும். தரங்கத்திடையே தரளம் பிறக்கும். சேற்றில் செந்தாமரை பிறக்கும். அங் ங்னமே பரத்தையர் குடியிலும் பண்புடைப் பாவை யர் பிறத்தல் இயல்பு. மாதவி என்னும் மாபெருங் தேவியால் மாட்சிமையுற்றது அப்பரத்தையர் குடி யன்ருே ? அங்கனமே மற்ருெரு பாவையாரும் அப் பெற்றித்தான பேசருங்குடியில் பிறப்பாராயினர். குலத்தளவே யாகும் குணம் என்பதும் பொது மொழி. அப்பொது மொழி இன்ைேரன்ன இன் குணவதிகளால் பயன்படுதலின்றிப் பாழ்படுதலும் உண்டு. இனி அப்பரத்தையர் குடியின் பாவையர் ஒருவரின் பண்பு நலன்களைப் பகர்வோமாக. கங்கையிற் புனிதமாய காவிரிபாயும் கவினுடை நாடு சோழ வளநாடு அன்ருே ? அங்காட்டு மன்னரே சோழர். பனிவரைக் குன்றினில் . புலிக் கொடி பொறித்த பூட்கையர். காவிரியின் சிறப்புக் கவிகளின் உள்ளத்தைக் கொள்ளேகொண்டது. அதனைப் பூ மகள் தன் செவிலி என்று செப்பினர். அண்ணல் பாகத்தை ஆளும் நாயகியின் உள்நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது என்று உரைத்தனர். இவ் வளத்ததான ஆறு பாயும் காட்டின் வளத்தை நவிலல் வேண்டுமோ? கன்னலின் வளர்ச்சி கமுகினைப்போன் றது. செந்நெல் வளர்ச்சி செழுங் கரும்பினை கிகர்த்