பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮧ180 கம்பிக் குகந்த கங்கைமார் பட்டதோர் கடவுட் சாதி. அவர்க்கிடம் தென்திசை யாதலின் தென்புலத்தார் என்ருர்" என்று எழுதியுள் ளார். ஆனால், பரிமேலழகர்க்குப் பல்லாண்டு முன்பி ருந்த அருண்மொழித்தேவர் தென்புலத்தார் என்னும் தொடர்க்குக் குரவர் என்னும் கோதறு பொருளே கொண்டு கூறினர். குரவர் ஆவார், அறவோர், அந்த னர், துறவோர் ஆதியோர். இல்லற நெறியினர் இவர் களைப் போற்றல் இயல்பு என்பதை இளங்கோ அடி களின் இன்னுரையாலும் எளிதில் உணரலாம். கண்ணகி தான் இல்லறத்தினின்று தன் கடனை ஆற்றும் நேர்மைபெரு நிலையை எடுத்து இயம்புகை யில், அறவோர்க்களித்தலும் அந்தணர் ஒம்பலும் துறவோர்க்கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கொடலும் இழந்த என்னே ' என்று கூறி வருந்தியதாக அவ்வரச கவிஞர் அறைகின்ருர். இங்ங்னம் நுண்பொருள் கூறும் நுண்மதி சேக்கிழார் படைத்தவர் என்பதை அவர் சிற்சில தேவாரப் பாக் கட்குப் பொருள் விதந்து எழுதிய இடங்களைப் படிப் பவர் படித்துப் படித்துச் சுவைத்துச் சுவைத்துப் பாராட்டாமலும் அறிவின் திறத்தை வியக்காமலும் இருக்க இயலாது. இதல்ைதான் சேக்கிழார் பிள்ளைத் தமிழ் பாடிய மாபெரும் புலவர் 'ககுபாசுரம் முதல் உரை செய்தலினல் நவில் உரையாசிரியன் என்றும், * சொல்லும் பொருளும் கனிசிறப்பச் சுருங்கச் சொல் லல் முதலாய, தோட்டி அமையக் கல்லும் கரையக் கவிபாடும் கனிவாய் ' என்றும் கசிந்துருகிப் பாடி யருளினர். . . சேக்கிழார் நூலேப் படித்து நுண்பொருள் சுவையை நுகர விரும்புவோர், சேக்கிழார்மீது பாடிய