பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 கம்பிக் குகந்த கங்கைமார் தைத் தமிழ் நூல்கள் பலவாறு கமுறுகின்றன. கற் புடை மாதரின் பொற்புடைச் செயலே ஒரு புலவர் புகலும் காலே நன்கணம் கவின்றுள்ளார். அதுவே கீழ்வரும் செய்தியாகும். நண்பர் ஒருவர்க்குப் புதிதாகக் கட்டப்பட்ட சித்திரமனை புகும் அழைப்பு இதழ் அன்புடன் அனுப்பப்பட்டது. அவ்விழாவிற்குச் செல்ல அன்ப ரும் விழைந்தார். அதற்குத் தம் அன்புடை மனேவி யையும் உடன்வர அழைத்தனர். அதுபோது அவர் தம் மனைவியார் தாம் வர இயலாது என்று கூறியதால் தாம் மட்டும் போவதாகப் புறப்படுகையில் நீரும் போதல் ஒண்ணுது” என்றனர் மனைவியார். அதல்ை சினம் உற்ற நண்பர் தோன் வர நினைத்திலேயேல், நான்தான் ஏனே போதல் அடாது?' என்று வினவ, அக்காலே அக்கற்புடைக் காரிகையார் கழறியதுதான் கற்பு மேம்பாட்டிற்குப் பொற்புடைய சான்ருகும். ' அன்புக்குரிய ஆருயிர்க் கணவரே ! ஓவியப் புது மனேயாதலின், ஆண்பாலர் உருவம் பல சுவரினே அலங்களிக்கும். அவற்றைப் பார்க்க யான் மனங் கொளேன். பார்த்து உள்ளம்,மறுக யான் இசை யேன். இதுவே நான் வரத் தாழ்த்தமைக்குக் கார ணம்.” என்றனர். இதுகேட்ட கணவனர் தம் இல் லக் கிழத்தியாரின் கற்பின் மேம்பாட்டை எண்ணி இறும்பூதுற்ருர், ! நீ கூறியது முற்றும் கேரியதே. ஆல்ை, யான் சென்று மீள என்னை ஏன் தடுக்கின் றனே?" இதற்கும் ஏதேனும் ஏது உண்டோ ? அதனை யும் இயம்பில்,ஏற்கலாம் ' என்றனர். அவ்வம்மையார், 'ஆடவர்-உருவினை அழகுறத் தீட்டிய ஓவியர், பெண்டிர் வடிவையும் வடித்தி