பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வனிதையர் வயங்கிய காலம் 163 இம்மையிலே புவியுள்ளோர் எவருங் காண எழுலகும் போற்றிசைப்ப எம்மை யாளும் அம்மைதிருத் தலையாலே கடந்து போற்றும் அம்மையப்பர் திருவாலங் காடாம் என்று தம்மையுடை யவர்மூதூர் மிதிக்க அஞ்சிச் சண்பைவருஞ் சிகாமணியார் சாரச் சென்று ச்ெம்மைநெறி வழுவாத பதியின் மாடோர் செழும்பதியில் அன்றிரவு பள்ளி சேர்ந்தார். என்று பாடி விளக்கினர். இன்னணம் தோணிபுரத் தோன்றலார் செழும் பதியில் தங்கி அன்றைய இராப்போது உறங்குங் காலத் தில், அவ்வுறக்கத்தின்கண் உமையொரு பாகனர் எழுந்தருளி, நம்மை அயர்ந்தனையோ பாடுதற்கு?" என்று நினைவுறுத்தித் தாண்டுவாராயினர். இவ்வண் ணம் இறைவனுர் தம் கனவிடைப் போந்து நினைவு படுத்தினமையை உணர்ந்ததும், சம்பந்தர் நெஞ்சம் துணுக்குற்றுத் தாண்டவப் பெருமானர் தடங்கரு ணேப் பெருங் திறத்தினைப் போற்றித் திருப்பதிகம் பாடலானர். அப்பதிகமே, " துஞ்ச வருவாரும் தொழுவிப் பாரும் வழுவிப்போய் நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப் பாரும் முனைகட்பாய் வஞ்சப் படுத்தொருத்தி வாளுள் கொள்ளும் வகைகேட் டஞ்சும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. என்பது. இதில் நெஞ்சம் புகுந்தென்னே நினைவிப் பாரும் ' என்று குறிப்பிடப்பட்டது, ஆலங்காட்டப் பர் ஆளுடைப் பிள்ளையாரின் கனவில் கூறிய, "ம்ேமை அயர்ந்தனையோ பாடுதற்கு?" என்பதைத் தெற்றென வெளிப்படுத்துவதாகும். இத்தேவாரப் பாட்டின் பொருளே கன்கு உணர்ந்தே தொண்டர் சீர்பரவுவா ராம் தொல்லாசிரியர், சீர்காழிச் செம்மல் திருவாலங்