பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கணவனர் விரதம் காத்த காரிகை ஆதலின், அம் மகவு பிறந்த மகிழ்ச்சியினல் பெருஞ் சிறப்புக்களைச் செய்து மகிழ்ந்தார்கள். அற்ருர்க்கும் அலங்தார்க்கும் அருகிதியம் வழங்கினர்கள். திருமகனர் வளர்ந்து பள்ளியில் பயிலும் பருவமும் உற்ருர். அது கண்டுதந்தை மகற் காற்றிவேண்டிய நன்றியாகிய அவயத்து முந்தியிருக்கச் செய்யப் பள்ளி யில் பயிலுமாறு ஏற்பாடு செய்தார். மைந்தரும் மன மகிழ்ந்து பயில்வாராயினர். இவ்வாறு பரஞ்சோதி யார் இகத்துக்கும் பரத்துக்கும் பயனுடைய செயல் களைத் தம் பரிவுக்குரிய மனைக்கிழத்தியாருடன் செய்துவந்தனர். இவருடைய செயலை இறைவர்ை உணர்ந்தார் ; உணர்ந்த அவர் இவருடைய மெய்த் தன்மை அன்பு நுகர்ந்தருளுதற்குச் சித்த மகிழ் வைரவராய் இவர் திருமனே நோக்கி வந்தனர். வைரவராய் வந்த இறைவனர் திருமுகத்தில் அருள் பொழியும் அணிமுறுவல் நிலவெறித்தது. பெருகன்பு தழைத் தோங்கியது. பரஞ்சோதியார் இல்லத்தை நெருங்க நெருங்க, சென்னெறியெல்லாம் கண்டார் எவரையும் சிறுத்தொண்டர் மனே வினவி கடிது வருவாராயினர். 'எல்லாம் வல்ல இறைவர்க்குப் பரஞ்சோதியார் இல்லம் தெரியாதோ ? அவ்வாறு இருக்க, ஏன் கண் டாரை எல்லாம் மனை வினவினர்?' எனில், அன்புள்ள இடத்தை நாடி ஆண்டவன் அருள் தானே செல்லும் என்பதை எவர்க்கும் அறிவிக்கவே ஆகும். வைரவர் வந்த நேரம் பரஞ்சோதியார் இல்லத்தில் இல்லா நேரம். அன்று இல்லத்திற்கு ஓர் இரவலரேனும் வந்து உணவு ஏற்கத் தாமதம் ஏற்பட்டதால், அவர்களே நாடி அழைத்துவரப் புறம் போங்திருந்