பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவனுர் விரதம் காத்த காளிகை 59 காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே-காய்வதன்கண் உற்றகுணம் தோன்ரு தாகும் உவப்பதன்கண் குற்றமும் தோன்ருக் கெடும். இச் செய்யுளின் செம்பொருளை ஒருவர் நன்கு உணர் வரேல், நன்கு ஆராய்ந்து அறிதற்கு முன் ஒன்றைக் குறை கூறவோ, குணமாகப் புகழவோ முன் வரார் என்க. இனி என்ன நிகழ்கின்றது என்பதைச் சிங் திப்போமாக. பரஞ்சோதியார் பைரவர் பகர்ந்த மொழியினைக் கேட்டதும் சிறிதும் பரிபவம் உற்றிலர் : பரவசமே உற்றனர். அவர் கூற்றுக்கு விடையாக விரிவாகவும் பேசிலர் ; இதுவும் அரிதன்று ' என்றே இயம்பி நீர் எம் இல்லம் போந்து அமுது செய் தால் அதுவே சாலும்.' என்று அறைந்து அவர் மலரடி வணங்கி மனத்தினும் முந்திய கடு வேகத்தோடு கடிமனை வந்துற்ருர். நீண்ட பேச்சால் தம் இசைவினைத் சிறுத் தொண்டர் அறிவித்திருக்கும் நிலையில் சேக்கிழார் பாடல் அமைத்துப் பாடி இருப்பாராயின், உள்ளத் தில் பகையும் உதட்டில் உறவும் கொண்டு பேசுகிருர் போலும் என்று பைரவர் எண்ணிவிடுவர். இவ்வாறு எண்ணிவிடக்கூடாது என்பதற்காகவே, 'இதுவும் அரிதன்று' என்று சிறுத்தொண்டர் கூறியதாகச் சேக்கிழார் அமைத்தது அவரது துண்ணறிவுத் திறனே நுனித்தறிற்கு ஒர் இடமாகத் துலங்குகிறது. இது கிற்க "சென்ற கணவர் இன்னும் வந்திலர்." என்று வாட்டமுற்றவராய் வீட்டில் உற்ற திருவெண்காண்டு