பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வ ள் ளி ம லை வ ள் ள ல் (R. கல்யாணசுந்தரம் இயற்றியது.) அண்மையில் நம்மிடை உலவிவந்து 1950-ஆம் ஆண்டில் மகாசமாதி அடைந்த திருப்புகழடியார்ச் திருவடிச் சென்னியார் என்னும் வள்ளிமலைத் திருப்புகழ்ச் சச்சிதானந்த சுவாமிகள் கிவ்ய சரிதம் வெளிவந்து விட்டது. நாற்பது வயது வரை எழுத்து வாசனையில்லாமல் முரட்டு நாஸ்திகராக இருந்த இம்மஹான், இறை திருவருளால் 'அறிவுமறி தத்துவமும் அபரிமித வித்தை களும்...இமைப்பொழுதில்' கைவரப் பெற்றவர். இவரது அற்புத வாழ்க்கை சுவைமிக்க பலபல இனிய வரலாறுகள் கொண்டது. மதிப்பிற்குரிய டாக்டர் M. R. குருசுவாமி முதலியார் உர்ைச்சி மிக்க முன்னுரையில், சுவாமிகளே யோகி எனவும், ஞானி எனவும், சித்தர் எனவும் பலபடக் கூறி, பக்தர் என்றும் விளக்குகிருர். ராவ்பகதூர் தணிகை மணி வ. சு. செங்கல்வராயப் பிள்ளை சுவாமிகளது சரித்திரத்தை, நால்வரது வாழ்க்கைச் சம்ப வங்களுக்கே ஒப்பிடுகின்ருர். வாகீச கலாநிதி கி. வா. ஜகந்நாத அய்யர் சுவாமிகள் அருணகிரிநாதரது அவதாரமே எனவும் பாராட்டுகின்ருர். ரிஷீகேசம் சுவாமி சிவானந்தா அவர்கள் சுவாமிகளை முருகரது அவதாரமே எனவும் போற்றுகின்ருர், இந்நூலேப் பல படங்கள் அலங்கரிக்கின்றன. திருவருள் மஹிமையின் விளக்கமே இந்நூல். திருச்செங் கோடு, திரு அருணே, வள்ளிமலை, பழநி, கதிர்காமம் இன்னும் பற்பல தலங்களின் வரலாற்றுச் சுருக்கமும், சேஷாத்ரி சுவாமி கள், பகவான் ரமண மஹரிஷி, மஹான் ஈசுவரசுவாமிகள் இவர்களது வரலாறுகளும் அடங்கியுள்ளன. திருப்புகழ் மேற் கோள் பலவும், முத்தமிழின் அருமை பெருமையும் இந்நூலில் கண்டு களிக்கலாம். இது படிக்கப் படிக்கத் தெவிட்டாத இன்பம் பயக்கும் ; பக்திப் பயிரைப் பண்புடன் வளர்க்கும். பக்கம் 272 + 24. விலை ரூ. 2-8-0 (2-50 nP.) பிரசுரம் : இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ் லிமிடெட். 14, சுங்குராம செட்டித் தெரு, : : சென்னை - 1. சி