பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv இக்கோயிலில் குடிகொள்ள விநாயகர், முருகர், மகேச்வரி, ாைராயணி, ப்ராஹ்மி ஆகிய 5 கற்சிலைகள் கைதேர்ந்த சிற்பியைக் கொண்டு செய்யப்பட்டன. தேவியின் சந்நிதானத்திற்கு மேல் மூன்று கலசங்களோடு அழகிய விமானம் ஒன்றும் அமைக்கப்பட் டது. 1958-ஆம் ஆண்டு மேமீ (26 to 30-5.58) விசாலமான யாகசால்ை ஒன்று கட்டப்பட்டு தேவிபூஜா கல்பவிதிப்படி லெளகந்தி ஹோமம் முதலிய யாகங்கள் அல்லும் பகலும் விரிவாக நடந்தன. இறுதியில் புதிய கலசங்களுக்கும் விக்ரஹங்களுக்கும் வெகு விமரி சையாக 30-5-58-இல் மகா கும்பாபிஷேகம் நடந்தேறியது. மண்டலாபிஷேகமும் 20-7.58-இல் ாடைபெற்றது. ஒவ்வொரு தலபுராணத்திலும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூவகைச் சிறப்பையும் கூறல் மரபு. இதுவரை, மூர்த்தி, தலம் என்ற இரண்டின் சிறப்புக்களையும் பார்த்தோம். தீர்த்தம் வேண்டுமல்லவா! தேவி தனக்கென ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டனள். தேவி, அன்பரிடம் தன் சந்நிதிக்கு அருகில் தென்கிழக்கில் குறிப்பிட்ட ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி அங்கு கிணறு ஒன்று தோண்டுமாறும், அதற்குக் கங்கா தீர்த்தம் எனப் பெயர் வைக்குமாறும் கட்டளையிட்டனள். என்னே ! தேவியின் கருணை அவ்வாறே தோண்ட, வற்ருத ஊற்று சுரந்தது. தண்ணீர் கண்ட அக்கணமே அன்பர் அதில் கங்கை நீரைச் சொரிந்து அம் மையின் கட்டளையை நிறைவேற்றினர். கங்கா தீர்த்தமும் அழகாக அமைந்தது. தீர்த்தத்தின் சுற்றுப்புறத்துக் கீழண்டைச் சுவரில் பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட (முதலைமேல் வீற்றிருக்கும்) கங்கா தேவி விக்ரஹமும் ப்ரதிஷ்டை செய்யப்பட்டது. சற்றும் எதிர்பாராத வகையில் முன்பு யாகசாலை இருந்த இடத்தில் மடைப்பள்ளி ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. XII. ஸ்படிக விநாயகர் அன்பர். மயிலையில் வசித்துவந்தபோதே, தேவியுடன் ஒரு விநாயகர் விக்ரஹத்தையும் வைத்துப் பூஜை செய்வது நல்லது என்று வள்ளிமலை ஸ்வாமிகள் அன்பரிடம் தெரிவித்திருந்தார். ஆல்ை, வெகு நாட்கள் வரை அன்பர் அதைச் செய்யவில்லை.