14
ஸ்தாபன ஐக்கியம்
ஆனால், அடிப்படை பலமாக இருந்தால் மாளிகை கெடாதிருப்பதுபோல, கொள்கை பலமிருந்தால் ஸ்தாபனம் கெடாது. அதற்காக, ஸ்தாபனத்தின் ஐக்யம் கெட்டுவிடத்தக்க நிலைமைகள் ஏற்படும்போது, அக்கரையற்று இருந்துவிடவும் கூடாது.
தொழிலாளர் ஸ்தாபனம் மனக்குறையின் மீதும், அதனால் இயற்கையாக ஏற்படக்கூடிய ஆத்திரத்தின் மீதும், ஏற்பட்டுவிடுவதுண்டு. இவை சரியான அடிப்படை அல்ல. வாழ்வதற்கு உழைக்கிறோம், ஆனால் வாழ்வு இல்லை. உழைக்காது வாழ்கிறார்கள், அந்த வாழ்வுக்குத் தங்குதடை இல்லை. வாழ்வோம் அனைவரும் — வாழ உழைப்போம்—ஒருவர் உழைப்பின் மீது மற்றொருவரின் வாழ்வு அமைக்கப்படும் அநீதியை ஒழிப்போம், என்ற அடிப்படைகளின்மீது கட்டப்பட்டுள்ள தொழிற் ஸ்தாபனங்கள், அந்த உன்னமான இலட்சியம் ஈடேறவேண்டும் என்ற பெரு நோக்கத்தை உறுதுணையாகக் கொண்டு ஸ்தாபனத்தின் நடைமுறை வேலையில், உறுப்பினர்களுக்குள் உள்ளக் கொதிப்போ கசப்போ ஏற்படாத வகையிலும், இன்னார் செய்கிற காரியம் இன்னார்க்குச் சரி என்று படவில்லை என்ற நிலை ஏற்படாத வகையிலும், ஸ்தாபனத்தின் வேலைகளில், அவரவர்களுக்கு அவரவர் ஆற்றலுக்கேற்ற, ஆனால். ஸ்தாபனத்தின் மூலக் கொள்கைக்கு ஊறு கேரிடாத முறையில், பணி உண்டு என்ற முறையில் ஸ்தாபனத்தை நடத்திச்சென்றால், ஐக்கியம் கெடாது — பலனும் நிச்சயம் விளையும்.
ஸ்தாபனத்தின் பலம் வளரும்போது ஏற்படும் அல்லலைவிட, ஸ்தாபனத்தின் பலம் வளர்ந்தபிறகு ஏற்படும் அல்லல் அதிகம். ஸ்தாபனம் வளரும்போது