பக்கம்:ஸ்ரீ திரிபுரா ரகசியம்.djvu/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

ஸ்ரீ திரிபுரா ரகசியம்

லாதவன் என்றே சொல்லல் வேண்டும்; அவன் ஸ்தாணுதான் ; சம்சயமில்லை. அப்படிப்பட்டவனுக்குப் பரமசிவனே பிரத்தியட்சமாக வந்து உபதேசம் செய்தாலும் ஞானமுண்டாகமாட்டாது. அவ்வளவு மகிமை பொருந்திய ஞானகாண்டமாக விளங்குகிற இதனைச் சொல்லுகிறேன் கேட்கக்கடவீர். அகோ ஆச்சரியம்! ஸத்துக்களுடைய நடத்தை மிக அற்புத மாகவும் சகல குணங்களும் பொருந்திய தாகவும் இருக் கின்றது; ஏனென்றால், தேவரிஷியான நாரதரும் என் னிடத்திலிருந்து சற்றே கேட்டுக்கொள்ளுகிறார்; கஸ்தூரியினிடத்தில் வாஸனை எப்படி ஸஹஜமாயிருக்கின்றதோ அப்படியே ஸத்துக்களிடத்தில் அநுக்கிரகம் செய்யும் தன்மை ஸஹஜமாயிருக்கின்றது.

நல்ல உள்ளமுடைய ஜமதக்னி புத்திரனான இராமன் பக்தியினால் இலீனமான சுத்தசித்தமுடையவனாகி அற்பம் நிர்ச்சிந்தையை அடைந்தான். பிறகு பாகிய விருத்தியை யுடையவனாகி ஆநந்தக் கண்ணீருடனும் மயிர்க்கூச்சுடனும் உள்ளத்தில் ஆந்தம் பொங்கத் தத்தகுருவினுடைய சரணங்களில் தண்டாகாரமாக நமஸ்கரித்தான். பிறகு எழுந்திருந்து ஹர்ஷம் நிறைந்தவனாகி விம்மிக்கொண்டு சொல்லுகிறான் “ஹே ஸ்ரீ குருவே! தங்களுடைய பிரசாதத்தினால் நான் தன்யனானேன் ; கிருத கிருத்தியனானேன், யாதொரு காரணத்தினால் சிவரூபியானவரும் கருணைக் கடலானவருமாகிய ஸாக்ஷாத் குரு என்னிடத்தில் சந்தோஷத்தைப் பாராட்டுகிறாரோ, எவரொருவருக்கு சந்தோஷ முண்டானால் பிரம்ம பதவியும் திரணத்திற்கு நிகராய் விடுகிறதோ, மிருத்யுவும் ததாகாரமாய் விடுகிறதோ அப்படிப்பட்ட மஹேசுரனான குருவுக்கு