பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

ஹிராடெடஸின்


என்று மன்னன் பணியாளர்களுக்கு ஆணைவிடுத்தான். உள்ளே சென்ற காவலர் கண்ட காட்சி என்ன தெரியுமா? களிமண்ணால் செய்யப்பட்ட பன்றியின் படிமம் ஒன்று சுவரின் மேலே மாட்டப்பட்டிருந்தது பல்லி ஒன்று அதன் மேல் ஊர்ந்து சென்ற அசைவால் குழந்தையின் தலைமேலே விழுந்து இறந்துவிட்டிருந்த காட்சியைக் காவலர்கள் கண்டு அரசனிடம் கூறினார்கள்.

குழந்தை செத்துப் போனதை அறிந்த அரசன் மிகவும் வேதனைப் பட்டான். ஆனாலும், அந்த சோதிடச் சிறுவன் கூறியபடி நடந்ததால், அன்று முதல் அவனையே தனது அரசவை கணியனாக நியமித்தார். பன்றி படிமத்தால் குழந்தை சாவான் என்று கூறியதால், மிகிராகுலன் என்ற பெயருடையவன் வராகமிகரன் என்று அழைக்கப்பட்டான். வராகம் என்றால் பன்றி என்ற ஓர் பொருளும் உண்டல்லவா? அதனால் அப்பெயர் அவனுக்கு ஏற்பட்டது.

கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் நடந்ததாகக் கூறப்பட்ட இந்தக் கதையான வராக லீலைக்குரிய ஆதாரம் ஏதுமில்லை. என்றாலும், கிரேக்க நாட்டில் கி.மு.559-ல் நடந்ததாகக் கூறப்படும் வராக லீலையின் அவதாரமாக இந்தியப் புராணம் புனையப்பட்டது என்பதுதான் உண்மையோ! சிந்தியுங்கள்.


11. சிறுத்தொண்டரும் - சிவகவியும்!

ஹிராடெடஸ் கூறுகின்ற இந்த வரலாற்றுச் சம்பவம் போக, குரோசஸ் என்ற மன்னனின் கடைசிக் காலம் எவ்வாறு கல்லறையானது என்பதையும் படிப்போம்.

குரோசசுக்கு சிறு வயதில் ஒரு மகன் இருந்தான். குரோசஸ் கண்ட கனவுப்படி, பன்றியின் பொம்மை அந்தச் சிறுவனின் மேல் விழுந்தபோது மண்டை உடைந்து மாண்டான் என்பதை மேலே பார்த்தோம்.