பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


26 1806 ______________________________________________________________________________________ பட்ட இந்தியக்கொடி-மைசூர் அரண்மனைக் கொடி-பட்டொளி வீசிப்பறந்தது.

புரட்சி தொடங்கி ஐந்து மணி வரை எந்த வெள்ளையனுக்கும் வெளியே தலை நீட்டத் துணிச்சலில்லை. காலை ஏழு மணிக்கு லெப்டிணன்டு மிட்சல் என்பவன் மட்டும் வேலூர்க் கோட்டையிலிருந்த படைத்தலைவர்களுள் ஒருவனாகிய பாரோ வீட்டிற்குச் செல்லப் புறப்பட்டான். புதிய வீட்டில் அடைக்கலம் புகுந்த துரைமார் அனைவரும் திருதிருவென விழித்துக் கொண்டு திகிலுடன் காலத்தைப் போக்கினர். காலை எட்டு மணி ஆயிற்று. துரைமார்கள் ஒளிந்திருந்த வீடு புரட்சி வீரர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டது. இரு தரப்பிலும் கடுமையான துப்பாக்கிப் பிரயோகம் நடை பெற்றது. இந்தியச் சிப்பாய்களின் ஆற்றலுக்கு எதிர் நிற்க இயலாமல் வெள்ளைத் தளபதிகள் அனைடவரும் சிப்பாய்கள் குடியிருக்கும் பகுதிக்குள் போய் மறைந்தனர். தப்பியோடிய அத்துரைமார்களை விடாது விரட்டி வேட்டையாடினர் புரட்சி வீரர். செய்வதறியாது திகைத்த சீமைத் துரைகள் தாங்கள் ஒளியச் சென்ற இடத்திற்கு எதிரே இருந்த பறைச்சேரியை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். எப்படியாவது கோட்டை கொத்தளங்களைக் கைப்பற்ற வேண்டுமென்பதே பறங்கிப் பட்டாளத்தின் திட்டம். ஆனால் வெள்ளைச் சிப்பாய்கள் அனைவரும் அதிகாலையில் நடைபெற்ற போராட்டத்திலேயே