இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
152
FAMILIAR DIALOGUES IN
It is good, but I do approve of the Texture.
இது நன்றாயிருக்குது. ஆகிலும் நெசவு எனக்கு நேத்தியானதாய்த் தோற்றவில்லை.
Look upon that cloth in the light, and it will suit your fancy,
நீங்கள் அந்தப் பிடவையை வெளிச்சத்திலே பாரும். அது உங்களுக்குச் சரிப்படும்.
I like this cloth but it will not last long.
எனக்கிந்த பிடவை சம்மதியாயிருக்குது. ஆனால், நாட்பட நிற்காது.
Here is another piece,
இதோ வேறொரு பிடவையிருக்குது.
This will answer in my purpose,
இது என்னுடைய காரியத்துக் குதவும்.
How much do you ask for it?
இதுக்கு நீர் யெவ்வளவு கேட்கிறீர்?
How do you sell a yard?
கெசம் யென்னமாக விற்கிறீர்?
The lowest price is 2 Rupees a yard.
குறைந்த விலை கெசம், ஒண்ணுக்கு ரெண்டு ரூபாய்.
That is too much,
அது றொம்பவும் அதிகமாயிருக்குது.
You do not consider the quality and fineness of the cloth,
நீர் பிடவையினுடைய குணத்தையும், நாணயத்தையும் யோசிக்கவில்லை.
This cloth will wear well,
இந்த பிடவை உடை தாளும்.
Merchants are never wanting in praising their commodities.
வற்தகர்கள் தங்கள் சரக்குகளைப் புகழுகிறதற்கு சொல்ல வேண்டியதில்லை.
I assure you this cloth is worth 20 Rupees.
இந்தபிடவை,௨௰, ரூபாய் பெறுமென்று உமக்கு நிட்சயமாய்ச் சொல்லுகிறேன்.
I am not used to Haggle,
விலைக்காகப் போராடுகிறதற்கு எனக்கு வழக்கமில்லை
Tell me your last word,
உன்னுடைய கடைசி வாற்தையை எனக்குச் சொல்லும்.
I told you sir, it is worth so much,
அது இவ்வளவு பெறுமென்று தங்களுக்குச் சொன்னேனையா.
What will you offer me for it?
அதுக்கு நீரெனக்கென்ன கொடுப்பீர்?
I will give you 18 Rupees for it
அதுக்கு ௰௮ ரூபாய் தருகிறேன்.