உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எண்ணிலா வெடியுடன் எம்மை அழைத்திட்டு
வழக்கப் படிஇரு வண்டியில் ஏறினேம்.
கிழக்கு, தெற்கு, மேற்கு வடக்கெனும்
நான்கு திசையினும் நன்கவர் வளைந்தனர்
வான்கதிர் மதியினை வல்லர வடுத்தல்போல்
நடந்தன வண்டிகள் நாலா பக்கமும்
நடந்தனர் நம்மவர் நண்ணினேம் கோவில். என்
மாதுலன் என்பின் மகனொடு நின்றான்.
101


101