உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XV


வாய்க்கப் பெற்ற மாத்தகை நண்பன்
சிதம்பர வேள் தன் சீர்பெறும் வாழ்வே
வாழ்வென மகிழா பலருமவ் வம்மையைப்
போற்றப் புகழுடம் பெடுத்துப் பூத
உடலம் துறந்ததை ஒண்பாவின் ஓதினன்
அளகை நகரின் அருகிற் பொருந்தும்
முடிமன் செய்த முதுதவப் பயனால் ௫௰

அங்குதித் தெங்கும் அளவிற் புகழ் நிறீஇ
அடிமுடி யின்றி யகண்டம தாகி
எங்கும் தானா யிலங்கும் ஏக
சச்சிதா நந்தத் தனிப்பரம் சுடரைத்
தானாய் வணங்கி யூனமார் மண்பெண்
பொன்மேல் ஆசை மன்னா தகற்ற
முயலும் என்தன் முத்தைய மால்தான்
உலகிற் பெண்கள் உயர்தர
நடைபயின் றழிவில் நலம்பெறு மாறே. ௫௯

சுவாமி–வள்ளிநாயகம்.