பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

வள்ளியம்மை சரித்திரம்.


அவையடக்கம்.

நன்பாவில் மிக்க நலம்சேர் முதியோர்என்
புன்பாவில் குற்றம் புகலாரே - அன்பால்
அறியாத சேய்சொல் அமிழ்தமெனக் கொண்டின்
புறுவாரே பெற்றோர் உவந்து.

நூற் காரணம்.


நல்வார் குணமுரைத்தல் நன்றெனமுன் ஒளவை சொன்ன
சொல்லானும் இப்புவிவாழ் தோகையர் இந்-நல்லாளின்
நன்னீர்மை தான் அறிந்தெஞ் ஞான் றும் பயிலற்கும்
இந்நூல் பகர்ந்தேன் இசைந்து.

நூற் பயன்.


வான்மதியால் மிக்குயர்ந்த வள்ளியம்மை மாண்சரிதம்
பான்மையுடன் கேட்போரிப் பாருலகில் - மேன்மையு
இல்லறமாண் புற்றிங் கிளிதுவாழ்ந் தேவீடும் [றும்
நல்லறமாண் பால்பெறுவர் நன்கு.