பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏழைகளுக்கு அன்னமிடுதல்.

33


யாதும் வியவா அருந்தவத்தோ ரும்தகவாள்
கோதில் மதிவியந்தே கூறுவர்அம்—மாதவத்தோர்
ஆங்குச் சிலநாள் அமர்ந்திருந்து பின்வேறோர்
பாங்குசெலும் போது பணிந்து. ௱௮௭

அன்னவர்தாள் போற்றி யடிகள்மீர் நீவிரெங்கட்
கின்னருள்செய் தின்னும் எழுந்தருளி—நன்மையதா
யாங்களுய்யச் செய்வீரென் றன்பனொடு சேர்ந்துரைக்கும்
பூங்கொடிமிக் கன்பே புரிந்து. ௱௮௮

ஏழைகளுக்கு அன்னமிடுதல்.


துதிசொலிவந் தெம்பசிக்குச் சோறிடுதாய் என்னும்
அதிதிகளாம் ஏழைகட்கும் யார்க்கும்—மதியுயர்வாள்
இன்னருள்செய் தன்னம் இடும்இயல்பும் கூறுவேன்
என்னுளத்தில் இன்பம் இசைந்து. ௱௮௯

தாயே மகராசி சற்குணியே மிக்கேழை
யாயோங் களுக்கிடுவாய் அன்னமெனத்—தூயாளின்
சீர்மிகவே போற்றித் தினமுமவர் கூறுமுரை
ஆர்கடல்போல் கேட்கும் அவண். ௱௯௰

ஓங்குபசி யால்சேய் உணங்கியழும் ஒண்குறல்காண்
பாங்கிலுறை தாய்செவியில் பட்டிடல்போல்—பூங்குழலாள்
தன்செவியில் உற்றிடலும் தண்தமிழை யொத்தஅரும்
இன்சொலினாள் அன்போ டெழுந்து. ௱௯௧

பொற்கமலந் தன்னிலதி பொற்பா முகமலர்ந்தோர்
நற்கமலந் தன்னில் நனிகொணர்ந்தே—அற்கமலம்
அன்னவவர் தம்முகமும் ஆங்கிலங்கச் செய்திடுவாள்
இன்னமுதம் அன்னாருக் கீந்து. ௱௯௨

 

3