பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மனம் போல வாழ்வு. ஆற்றலும் அறிவும் அன்பு தனது நினைப்புக்களுக்குத் தான் கர்த்தனாகவும் இருத் தலால், மனிதன் ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் உரிய திறவுகோலை உடையவனாகவும், தன்னை விரும்பின படியே செய்துகொள்ளத் தக்க கர்த்திருத்துவத்தை உடையவனாகவும் இருக்கிறான். மனிதன் எப்பொழுதும் தலைவனே; பாராட்டு வாரின்றி மிக மெலிந்திருக்கும் நிலைமையிலும் அவவ் தலைவனே ; ஆனால், இந்நிலைமையில் அவன் தனது காரியங்களை ஒழுங்காக நிர்வகிக்காத ஒரு மூடத்தலை வனாகிறான். அவன் எப்பொழுது தன் நிலைமையைப் பற்றிச் சிந்திக்கவும் தன் ஜீவனுக்கு ஆதாரமான நியதி யைப்பற்றி ஆவலுடன் விசாரிக்கவும் தொடங்கு கிறானோ,அப்பொழுதே அவன் தனது முயற்சிகளை விவேகத்துடன் செலுத்தி நற்பயன் அடையும் விதத் தில் தனது நினைப்புக்களைத் திருத்தும் அறிவுடைய தலைவன் ஆகிறான். தன் தலைமையை அறிந்த தலைவன் அவனே ; அங்ஙனம் ஆதற்கு அவன் தன்னுள் நினைப் பின் நியதிகளைக் கண்டுபிடித்தல் வேண்டும். அவற் றைக் கண்டுபிடித்தற்குரிய சாதனங்களாவன முயற்சி யும் தன்னையறிதலும் அனுபவமும் கன்பனவே. அதிக ஆழமாகச் சுரங்கம் அறுத்தலாலும், அதிக கவனத்தோடு தேடுதலாலும், தங்கமும் வைரமும். கிடைக்கின்றன; மனிதன் தனது ஆன்மாவாகிய சுரஜ் கத்திண்கன் அழ்ந்துசென்று தேடுவானுயின், தனனு 20