பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நினைப்பும் நிலைமையும் ஒரு மனிதனது மனம், விவேகத்துடன் பயிர் செய்யத்தக்க, அல்லது காடாகும்படி விட்டுவிடத்தக்க, ஒரு தோட்டத்திற்குச் சமானமாகும். பயிர் செய்தா லும் செய்யாவிட்டாலும் தோட்டம் ஏதேனும் ஒரு விளைவைக் கொடுக்காமற் போகாது. அதில் பிரயோ ஜனமுள்ள வித்துக்களை விதைக்காத பக்ஷத்தில், பிர யோஜனமில்லாத பூடுகளின் வித்துக்கள் விழுந்து பல பூடுகள் விளையும். ஏராமாக ஒரு தோட்டக்காரன் தனது நிலத்திலுள்ள புல் பூடுகளை நீக்கித் தனக்கு வேண்டும் கனிகளையும் காய் கறிகளையும் கொடுக்கத் தக்க மரங்களையும் செடிகளை யும் அதில் வைத்து வளர்த்தல்போல, மனிதன் தனது மனத்திலுள்ள குற்ற நினைப்புக்களும் பயனற்ற நினைப் புக்களும் அசுத்த நினைப்புக்களுமாகிய புல்பூடுகளை நீக்கி, ஆரோக்கியமும் செல்வமும் வலிமையுமாகிய காய்கறி களையும் இன்பமும் புகழும் முத்தியுமாகிய கனிகளையும் கொடுக்கத் தக்க குற்றமற்ற நினைப்புக்களும் பயனுள்ள நினைப்புக்களும் சுத்தமான நினைப்புக்களுமாகிய செடிக ளையும் மரங்களையும் வைத்து வளர்த்துக்கொள்ளலாம். இங்ஙனம் செய்துவருதலால் மனிதன் தனது ஆன்மா வாகிய தோட்டத்தின் தலைவன் என்றும்,தனது வாழ்க் கையின் கர்த்தன் என்றும், விரைவிலோ தாழ்ப்பிலோ, தெரிந்துகொள்வான். அன்றியும், அவன் நினைப்பின் நியதிகளைத் தன்னுள் காண்கின்றான்; நினைப்பின் சக்தி 22