உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மனம் போல வாழ்வு

அவளது நினைப்புக்களோடும் செயல்களோடும் இணங்கியிருந்தால் மாத்திரமே அவனுடைய விருப்பங்களும் கோரிக்கைகளும் நிறைவேறுகின்றன.

இவ்வுண்மையைக் கொண்டு நோக்குங் காலையில் "நிலைமைகளோடு போராடுதல்" என்பதன் பொருள் யாது?' மனிதன் காரணத்தைத் தனது அகத்துள் போஷித்து வைத்துக்கொண்டு காரியத்தோடு தனது புறத்தில் போராடுகிறானென்பதே அதன் பொருள். அக்காரணம் தான் அறிந்து செய்கின்ற ஓர் பாவமாக இருக்கலாம்; அல்லது அறியாது கொண்டுள்ள ஓர் பலஹீன (கெட்டபழக்க) மாக இருக்கலாம். எதுவாயிருப்யினும் அது தன்னைக் கொண்டிருப்பவனது முயற்சிகளை விடாப்பிடியாகப் பின் தள்ளித் தக்க பரிகாரத்தைத் தேடும்படி அலறுகின்றது.

மனிதர் தமது நிலைமைகளைச் சீர்செய்ய விசாரப்படுவதேயன்றி தம்மைச் சீர்செய்ய விரும்புவதில்லை; ஆகவே அவர்கள் எப்பொழுதும் கட்டுண்டிருக்கின்றனர். சரீரப்பிரயாசைக்குப் பின்னடையாதவன் கருதிய காரியத்தைத் தவறாமல் செய்து முடிப்பான். இவ்வுண்மை பரலோக சித்திக்கும் இகலோக சித்திக்கும் ஒக்கும். பொருள் தேடுதலே நோக்கமாக இருப்பவனும், தன் நோக்கம் முற்றுப் பெறுவதற்கு மிகுந்த மெய்வருத்தமுறச் சித்தமாயிருத்தல் வேண்டும். அஃது அவ்வாறாயின், எதற்கும் சலியாததும்

28