பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மனம் போல வாழ்வு. வெறுக்கமாட்டான். தனது இயற்கைக்கு மாறுபட்ட அரிய உணவுகளை உண்ணவும்வேண்டும், ஆரோக்கிய மாக இருக்கவும் வேண்டும் என்பது அவனுடைய விருப்பம். அத்தகைய மனிதன் ஆரோக்கியமா விருப்ப தற்கு ஒரு சிறிதும் அருகன் அல்லன், ஆரோக்கிய ஈழ்க்கைக்குரிய முதல்பாடத்தையும் இன்னும் கல் லா தவனாதலால். வா இதோ! கூலியாட்களுக்கு விதித்துள்ள வீதப் படி கூலி கொடாமல் தவிர்ப்பதற்குப் பல நெளிவான உபாயங்களைச் செய்துகொண்டும், அதிக லாபத்தை அடையலாமென்ற எண்ணத்தோடு தன்னிடம் வேலை செய்கிற ஆட்களின் கூலிகளைக் குறைத்துக்கொண்டும் வருகின்ற எஜமான் ஒருவன் இருக்கிறான். அவன் செல் வவானாவதற்குச் சிறிதும் தகுதியுடையவன் அல்லன்; பின்னர் அவன் செல்வமும் புகழும் இழந்து கடன் காரனானபோது, தன்னிலைமைக்குத் தானே காரணன் என்பதை உணராது, நிலைமைகளைக் குறைகூறுகிறான். தனது நிலைமைகளுக்குத் தானே காரணனென்ற உண்மையையும், தான் புறத்தில் ஒரு நல்ல காரியத் தைக் கருதி முயற்சிக்கின்ற காலையில் தனது அகத்தில் அக்காரியத்திற்குச் சிறிதும் பொருத்தமில்லாத நினைப் புக்களுக்கும் அவாக்களுக்கும் இடங்கொடுத்துத் தனது காரிய சித்தியை இடைவிடாது கெடுத்துக் கொண்டிருக்கிறா னென்ற உண்மையையும் விளக்கு 30