பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மனம் போல வாழ்வு. ஒருகாலத்தில் பிரத்தியக்ஷத்தில் காண்பான். கொலம் பஸ் என்பவர் வேறோர் உலகக்காட்சியைத் தம் மனத் தில் பேணிவந்தார்; அவர் அதனைக் கண்டுபிடித்தார். கோப்பர்நிக்கஸ் என்பவர் பல உலகங்களுடைய காட் சியையும் ஒரு பெரிய பிரபஞ்சத்தினுடைய காட்சி யையும் தம்மனத்தில் ஓம்பிவந்தார்; அவர் அவற் றைக் கண்டார்: புத்தர் மாசற்ற அழகும் மன ரம்மியமு முள்ள ஒரு மோக்ஷ உலகத்தின் காட்சியைத் தமது மனத்தில் பார்த்துவந்தார்; அவர் அதனுள் பிரவேசித் தார். ற உங்கள் மனக்காட்சிகளைப் பேணுங்கள்; உங்கள் மனோலக்ஷியங்களை ஓம்புங்கள்; உங்கள் ஹிருதயத் தில் உற்சாகத்தைக் கிளப்பும் கீதத்தையும், உங்கள் மனத்தில் உண்டாகின்ற ரமிப்பையும், உங்கள் தூய நினைப்புக்களை அலங்கரிக்கும் அன்பையும் பரிபாலியுங் கள்; ஏனெனில், எல்லா இன்பநிலைமைகளும், எல்லா மோக்ஷ சாதனங்களும் அவற்றினின்று வெளிப்பட்டு வளராநிற்கும்; நீங்கள் அவற்றை உண்மையாகப் போற்றிவருவீர்களாயின், முடிவில் உங்கள் உலகத்தை அவற்றாலே நிருமித்துக்கொள்ளலாம்.

அவாவுதலே அடைதலாம் ; நாடுதலே நிறைவேற் றுதலாம். மனிதனது மிக இழிந்த அவாக்கள் முற்றும் நிறைவேறுதலாயிருக்க, அவனது மிக உயர்ந்த விருப் ஆதரணையில்லாமையால் பலன்களை அடை யாமல் வீண்போதலுண்டா? தெய்வ நியதி அத்தகைய பங்கள் 58