பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வலிமைக்கு மார்க்கம்.
வெண்பா.

தீயவினை நோவு செறிதுன்பம் உட்கவலை
தூயமன வெள்ளுடையில் தோய்ந்ததனால் - ஆயகறை
பின்னிரங்கற் கேணி பிரார்த்தனையூற் றால்நீங்கி
முன்னிருந்த வெண்மை வருமோ!

அறியாமை மார்க்கத் தடிவைத்த போழ்து
செறியாநிற் கும்பெருகித் தீமை;- அறியாமை
எய்தியதன் காரணம்‘யான்' என்னும் சுயநயத்தைச்
செய்ததுவே யென்று தெரி.

அறிவுடைமை யாலாம்நீர் அவ்வுடையி லாய
செறிகறையைப்போக்கிவெண்மை சேர்க்கும் ;- அறிவுடைமை
அன்புசமா தானம் அழியாமெய்ஞ் ஞானமெனும்
மின்புனலை நல்கும் விரைந்து.

பாவம் செயல், பின் பரிந்திரங்கல் துன்பநெறி;
ஏமநல்கும் மெய்ஞ்ஞானம் இன்பநெறி:- ஞால
உயிர்க்கெல்லாம் நன்றாற்ற ஓடிவரும் மெய்ஞ்ஞானம்
செயிர்க்கெல்லாம் வேராம்'யான்' சென்று.

'யான்' உள்ளே யின்றாக இம்மண்நீர் தீக்காற்று
வான்உள்ளே நிற்கின்ற வாலறிவாம் - தேன் உள்ளே,
ஊறிப் பெருகியெங்கும் ஓடி நிறைந்துவெளி
ஏறிப் பெருகிநிற்கும் இங்கு.

முற்றும்.
110