பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 ஜில்லாவில், அதிக மசாலையும் உப்பும் சேர்த்து சமைக்கப்பட்ட கெளுத்திமீன் தலைகளை, கள்ளுக்கடையில் குடிப்பவர்களுக்கு இனாமாகக் கொடுப்பது வழக்கம். ஏனென்றால், அது அதிகமாய் குடிதாகத்தையுண்டுபண்ணும். இம்மீன்களை மிதித்தாலாவது, அசாக்கிறதையாய்ப்பிடித்தாலாவது பலமான காயம் உண்டாக்கக்கூடிய பொல்லாத எலும்பு முட்கள் முதுகிலும் வயிற்றிலுமுள்ள சிறகுகளிலிருக்கின்றன. சில சமயங்களில், அக்காயங்களில் விஷம் ஏறி, அதிக ஜாஸ்தியாய்ப்புண்ணாகிவிடுகிறது. திருக்கை மீனின் வால் முள்ளை முறித்து எடுப்பதுபோல், மீன்காரர்கள் கடைக்கு அனுப்புவதற்குமுன் இம்முட் களை முறித்து எடுத்துவிடுகிறார்கள்.

     கெளுத்தி மீன்களில் சில தினுசு மீனில், பெண் முட்டையிடும் பொழுது அம்முட்டைகளை ஆண்மீன் வாயில் வாங்கிக்கொண்டு குஞ் சுபொரிக்கும்வரையில் வாயி லடைக்கி வைத்திருக்கும். முட்டைகள் அரை அங்குலம் குறுக்களவுள்ள தாய்ப் மிகப்பெரிதாயிருப்பதால், அவ்வாண்மீன் காப்பாற்றக்கூடியனசிலவே. அம்முட்டைகள், அதி வாயை பூராய் நிரப்பிவிடுகிறபடியால், ஆண்மீன், தன் குஞ்சுக ள் வெளியாகி நீந்தச் சக்தியுள்ளவைகளாகும் பரியந்தம் ஆகார மில்லாமலே இருக்கும். யாதொரு வேலையுமில்லாத தாய் மீன் இக் காலத்தில் என்னசெய்கிறதென்பது நன்றாய் விளங்கவில்லை. ஒரு வேளை, மீன் சம்பந்தமான பொதுவிஷயங்களை அது கவனித்துக் கொண்டிருக்கிறாப்போலும்!!

ன்

  • அனேக னக மீன்கள், தங்களைச்சுற்றியிருக்கும் வஸ்துக்களைப்போ லாவது, அல்லது, கோபமூண்டபொழுதாவது, நிறம் மாறுகின்றன. அதற்கு மிகவும் முக்கிய உதாரணமாக, முசிடிமீன் என்பது இந்தக் குளத்திலிருக்கிறது. காலைநேரத்தில், வெள்ளி நிறம் என்று சொல் லத்தக்கதாய், சற்றுவெண்மையாயிருக்கிறது. சிரகுமட்டும், ரோஜா வர்ணமாயிருக்கிறது. சாயங்காலத்திலோ நிறம் குன்றி, மங்க லாக, மங்கிய செந்நிறமாகிவிடுகிறது. இந்த மங்கலான செந்நிறம், கோபமூண்டகாலத்திலும், அல்லது அக்குளத்தில் அதனோடு இருக் கும் மீன்கள், அதைத்தொந்திரவு பண்ணினாலும் அதற்கு உண்டா கிறது.

நெ.10,குளம். இந்தக்குளத்தில், கலவாய் என்று, கடல்-பர்ச் வகையைச்சேர் ந்த ஒரு கொழுத்த தினுசு மீனிருக்கிறது. அவைகள் இச்செய்குள்த் திலுள்ள மீன்கள் எல்லாவற்றையும்விட முன்னாலே கொண்டுவரப் பட்டிருப்பதால் அவைகள் மிகவும் பழகியவைகளாயிருக்கின்றன. அவைகள் நித்திரைசெய்யும்வேளை, ஒழுங்காய் ஏற்படுத்திக்கொண் டிருக்கின்றன. சூரியன் மறைந்தவுடன் தண்ணீரின் அடியிற்போய் தங்கள் சிரகுகளின்மேல் பிரர் ராபிட் (Brer Rabbit) சொல்லுகிற படி, ஒரு மனிதனைப்போல் நித்திரைபோகிறது. இந்தக்குளத்தி லுள்ள மற்ற மீன்களும், முக்கியமாய் பருத்த தேகமுள்ள மீன்க ளும், அவ்வாறே செய்கின்றன. மற்ற மீன்களில், சுறா (Dogfish) ள