உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம். சஅல. இரண்டுமுத லொன்பா னிறுதி முன்னர் வழங்கியன் மாவென் கிளவிதோல்றின் மகர வளபொடு நிகாலு முரித்தே. 'இஃதி, இரண்டு முதல் ஒன்பான்கள் முன்னர் அளவு முதலிய மூன்றற்கும் உகிய மா என்பது புணருமாறு கூறுகின்றது. இ-ள்:- இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர் - இரண்டு முதலாக ஒன்பது ஈறாகச் சொல்லப்படுகின்ற எண்களின் முன்னர், வழங்கு இயல் மா என் கிளவி தோன்றின் - வழக்கின் கண்ணே கிடக்கின்ற (விலங்கு மரம் முதலிய அல்லாத அளவு முதலியவற்றிற்குரிய)மா என்னும் சொல் தோன்றின்,மகா அன்பொடு நிகாலும் உரித்து - (இயல்பாய் முடிதலேயன்றி மேற் கூறிய) மண்டை என்னும் அளவுப்பெய ரோடு ஒத்து வேறுபட முடி வனவும் பெறும், உ-ம்;- இரண்டுமா, இருமா; மூன்றுமா, மும்மா; என ஒன்பதின் காறும் இவ்வாறு ஒட்டுக இரண்டு முதல் ஒன்பான் என்று எடுத்தமையின், ஒன்றற்கு ஒருமா என்னும் முடிபேயன்றி ஒன்றுமா என்னும் முடிபு இல்லையாயிற்று. இவற்றுள், மிக்க எண் ணோடு குறைந்த எண்வருங்கால் உம்மைத்தொகையாகவும், குறைந்த எண்ளுேடு மிக் சது வரிற் பண்புத்தொகையாகவும் முடித்தார் என்க. ('எகாரம்' ஈற்றசை.) (எச) சசிக, வனவென வரூஉம் புள்ளி யிறுதிமுன் உம்முங் கெழுவு மூளப்படப் பிறவும் அன்ன மரபின் மொழியிடைத் தோன்றிச் செய்யுட் டொடர்வ்யின் மெய்பெற நிலையும் வேற்றுமை குறித்த பொருள்வயி னான, இது, லகார னசார ஈற்றுச் செய்யுள் முடிபு கூறுகின்றது. இ-ள் :--ல ன என வரும் புள்ளி இறுதி முன் - ல ன என்று சொல்ல வருகின்ற புள்ளியீற்றுச் சொல்முன், உம்மும் செழுவும் உனப்பட பிறவும் - உம் என்னும் சாரி யையும் கெழு என்னும் சாரியையும் உளப்படப் பிற சாரியையும், அன்ன மாபின் மொழியிடைத்தோன்றி செய்யுள் தொடர்வயின் மெய் பெற நிலையும் - அப் பெற்றிப் பட்ட மாபினை யுடைய மொழியிடைத் தோன்றிச் செய்யுள் மொழிகளைத் தொடர்ந்து சொல்லும் இடத்து மெய்மைபெற விலைபெற்று முடியும், வேற்றுமை குறித்த பொருள் வயின் -வேற்றுமை குறித்த பொருட்புணர்ச்சிக்கண். உ-ம்:-"வான வரி வில்லும் திங்களும், கல்கெழு கானவர் ஈல்குறு மகளே” என வும்; மாநிதிக் கிழவனும் போன்ம்” எனவும்; "கான்கெழுசாடு" எனவும் வரும். 'மொழியிடைத் தோன்றி' என்ற மிகையால், பிற ஈற்றுள்ளும் இச்சாரியைபெற்று முடிவன கொள்க. துறைகெழு மாந்தை, வளங்கெழு திருநகர் எனலரும். அன்னமாபின்' என்றதனால், சாரியை காரணமாக வல்லெழுத்துப் பெறுதலும், அது பரரவமாக நிலைமொழியீறு திரிதலும், சாரியையது உகரக்கேடும், எகா நீட்சி யும் கொள்க, பூக்சேமூரன், வளங்கேழ்திருநகர் என்று அவ்வாறு வர்தமை யறிக. மெய் பெறி என்றதனான், இச்சாரியைப் பேற்றின் கண் ஈற்று வல்லெழுத்து வீழ்க்க, 'ஆன்' இடைச்சொல், அகரம் சசரியை,)