௱௪௬
தொல்காப்பியம் - இளம்பூரணம்
பொழிபெயல் வண்மையா னசோகந்தண் காவினுட்
கழிகவி னிளமாவின் றளிரன்னா யதன்றலைப்
[1]பணையமை பாய்மான்றே ரவன் செற்றார் நிறம்பாய்ந்த
கணையினு நோய்செய்தல் கடப்பன்றோ கனங்குழாய்;
வகையமை தண்டாரான் கோடுயர் பொருப்பின்மேற்
றகையிண ரிளவேங்கை மலரன்ன சுணங்கினாய்
மதவலி கமழ்கடாஅத் தவன்யானை மருப்பினுங்
கதல்வாற் றக்கதோ காழ்கொண்ட விளமுலை;
என வாங்கு,
இனையன கூற விறைஞ்சுபு நிலநோக்கி
நினைகுபு நெடிதொன்று நினைப்பாள்போன் மற்றாங்கே
துணையமை தோழியர்க் கமர்த்த கண்ணன்
மனையாங்குப் பெயர்ந்தாளெ னறிவகப் படுத்தே.” (கலித்-௫௭)
“உறுகழி மருங்கி னோதமொடு மலர்ந்த
சிறுகரு நெய்தற் கண்போன் மாமலர்ப்
பெருந்தண் மாத்தழை [2]யிருந்த வல்கு
லைய வரும்பிய சுணங்கின் வையெயிற்று
மையீ ரோதி வாணுதற் குறுமகள்,
விளையா டாயமொடு வெண்மண லுகுத்த
புன்னை நுண்டாது பொன்னி னொண்டு
மனைபுறந் தருதியாயி னெனையதூஉ
மிம்மனைக் கிழமை [3]யெம்மொடு புணரிற்
றீது முண்டோ மாத ராயெனக்
கடும்பரி நன்மான் கொடிஞ்சி நெடுந்தேர்
கைவல் பாகன் பையென வியக்க
யாந்தற் குறுகின மாக வேந்தெழி
லரிவே யுண்கண் பனிவர லொடுக்கிச்
சிறிய விறைஞ்சின டலையே
பெரிய வெவ்வம் [4]யாமிவ ணுறவே.” (அகம்-௨௩௦)
இவை உள்ளப்புணர்ச்சியான் வரைதல் வேண்டிப் பாங்கற்கு[5] உரைத்தன. (எ)
௯௬, அச்சமும் நாணு மடனு முந்துறுத
னிச்சமும் பெண்பாற் குரிய வென்ப.
என்-னின், இது தலைமகட்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
அச்சமும் நாணும் பேதை[மை]யும் இம்மூன்றும் -நாடோறு முந்துறுதல் பெண்டிர்க்கு
இயல்பு என்றலாறு.
(பிரதி.) -