பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 ஆலயப் பிரவேச உரிமை. கம். இந்த இடத்திற்கு ' அம்பலம்' என்று பெயர். இந்த 'அம் பலம்' என்ற பதந்தான் கோவிலையுங் குறிக்கின்றது. "சிவனை வழிபடுதல் ஆதியில் திராவிடர்களைச் சேர்ந்தது என்பதாக வேத இந்தியா, என்ற நூலை இயற்றிய ஆசிரியர் ரகோஸின் அபிப்பிராயப்படுகிறார். ஒரு மரத்து நிழலில் ஒரு கல் லிங்கத்தை ஸ்தாபித்து அதன்வழியாகவே சி.வனை வழி பட்டுவந்தார்கள். இதைத்தான் சிவலிங்கமென்று தந்திரீக நூற் களில் கூறப்பட்டிருக்கிறது. இப்பொழுதும், சிவன்கோவில் ஒவ் வொன்றிலும் முக்கிய தேவதையாக இருப்பது சிவலிங்கந்தான். ...இயற்கை லிங்கம்மாதிரி யமைந்துள்ள கற்களை நாட்டி சிவ லிங்கமாகக்கருதி வணங்கிவந்தவைகளை சுயம்புலிங்கமென்று சொல்வார்கள். எனவே, ஆண்,பெண் தேவதைகளுக்குப் பல் வேறு வகைப் பட்ட விக்கிரகங்களையமைக்கவேண்டிய தேவை வந்தபோதும் சமண பௌத்தமதக்கோவில்களிலிருந்த விக்கிரகங்களை இந்து விக்கிரகங்களாக மாற்றவேண்டி வந்தபோதும், சமணச் சிற்பிக ளான விஸ்வகர்மாக்களுடைய உதவியை நாடவேண்டியதாயிற்று. "இன்று பொதுமக்கள் கொண்டாடிவரும் ஆலயம், விக்கிர கம், ஆராதனை, உற்சவம், ஊர்வலமா தியவைகளெல்லாம் பௌத்த மதத்திலிருந்து நேராக யாதொரு மாறுதலுமின்றிக் கடன் வாங்கப்பட்டவைகளாகும். மேலும் இன்றையதினம் இந்துக் கோவில்களென மதிக்கப்படும் பெரிய கோவில்களெல்லாம் ஆதி யில் பௌத்தகோவில்களாக இருந்தனவென்பதை யாவருமறிவார். கள்" என 1931-ம் வருட திருவிதாங்கூர் ஜன கணித அறிக்கை (Census Report)யில் குறிப்பிட்டிருக்கிறது. ஆகையினால்தான், புதிதாக ஒரு இந்துக்கோவில்கட்டி முடிந் ததும்,அதைக் கட்டிமுடித்த இந்து விஸ்வகர்மாவைத் தங்கு தடையின்றி வெளியே தள்ளிவிடுகிறார்கள். கும்பாபிஷேகம், பிர திஷ்டைச் சடங்கு முதலியன முடிந்ததும், அந்தக்கோவிற்பணி செய்த விஸ்வகர்மா சந்ததியார் உள்ளே நுழையக்கூடாது. அது முதல் விஸ்வகர்ம வகுப்பினர் தீண்டப்படாதவராய்விடுகின்றனர்.