பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 95 கள் சிறிது வடமொழிப் பயிற்சியும் பெற்றிருந்தனர். இதன் மூலம் அவர்கள் சங்கராச்சாரியாரின் போதனைகளைப் பின்பற்றி யிருக்கவேண்டும்; இதற்குப் பதிலாக சங்கராச்சாரியாரும் ஆக மங்களைக் கைக்கொண்டார். இவ்வாறாகத் தென்னிந்தியாவில் ஸ்மார்த்த சமயம் தோன்றிற்று. கோவில் பூசாரிகளின் உற்பத்தியைப் பற்றி நாம் ஏற்கனவே கூறியிருக்கின்றோம். இந்தக் கோவில் பூசாரி ஒரு சண்டாள னாக வில்லாமற் போனாலும், அவன் இன்ன சாதியைச் சேர்ந் தவனென்று வரையறுக்கவுமில்லை; அவன் ஒரு சாதியையுஞ் சேர்ந்தவனல்ல. ஆகம விதிப்படி அவன் சாதியற்றவனாகவே யிருந்திருக்கவேண்டும். எனவே, இத்தகைய கோவில் பூசாரி தான் இயற்கையாகவே சங்கராச்சாரியாருடைய ஸ்மார்த்த பிராமணனாகி விடுகிறான். இன்று, ஆகமத்தைப் பின்பற்றி தென்னிந்தியக் கோவில் களில் கர்ப்பக் கிரகத்துக்குள்ளேயுங்கூட ஒரு ஸ்மார்த்த பிரா மணனை நாம் எவ்வாறு காண்கின்றோம் என்பதை மேலே கூறிய வற்றிலிருந்து அறிந்துகொள்ளலாம். இலங்கை இராவணனது சகோதரன் விபீஷணனை ஒரு வேளை ஆரியனென்று சொன்னா லும், தென்னிந்தியப் பார்ப்பானை ஒரு விதத்திலும் ஆரிய னென்று சொல்ல முடியாது. இந்தக் காரணந்தான் காலஞ் சென்ற ஜஸ்டிஸ் சதாசிவ ஐயரவர்களை ஒரு ஆலய வழக்கில் இவ்வாறு கூறும்படி தூண்டிற்று:- " குறிப்பிடப்பட்ட விஷயங்களைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்த மட்டிலும், எனது முடிவு என்னவென்றால், சாதாரண மாக நினைக்கப்படுவது போல் பிராமண இந்துக்கள் அவ்வளவு தூரம் ஆரிய ரத்தமுடையவர்களுமல்ல ; பார்ப்பனரல்லாத இந் துக்கள் அவ்வளவு தூரம் ஆரிய ரத்தமில்லாதவர்களுமல்ல வென் பதே. மேலும், ' திராவிடன் ' ஆரியனுக்கு' முரண்பட்ட வனென்பதையும் நான் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆகையினால், பார்ப்பனரல்லாதான் திராவிடன் என்ற மட்டி லும் ஆரியனல்லாதவன் என்று என் மனதிற்குப்படவில்லை.