பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 97 விட்டார்கள்; தங்களுக்குக் கிறிஸ்தவர்களது தயவினால் கிட்டிய இந்தக் கோவில்களைப் பற்றிய ஆகமங்களின் உட்பொருளையும் அவர்கள் மறந்துவிட்டார்கள். "தீண்டாமையை ஒழிப்பதற்குச் சிறந்தவழி சைவமதத் தைப் பரப்புவதாகும். தாழ்த்தப்பட்டவர்க களுடைய ஒழுக்கமா னது உயர் நிலையடையும்போது, இயற்கையாகவே யாதொரு தடையுமின்றி அவர்களுக்கு ஆலயப்பிரவேச உரிமை கிடக்கும். அத்தகைய காலம் வருமட்டிலும், தாழ்த்தப்பட்டவர்களுடைய உபயோகத்துக்காகத் தனிக் கோவில்கள் கட்டுவதற்கான ஏற் பாடுகளைச் செய்யவேண்டும் " என ஒரு சைவப் பெரியார் அறிவித்திருக்கின்றார். இந்த அபிப்பிராயத்தை வேறு பலரும் கைக்கொண்டிருக்கிறார்கள். தற்பொழுதுள்ள பொதுக் கோயில்களெல்லாம் பொதுமக் களுக்காக வல்லாமல், உயர் சாதி இந்துக்களுக்காகமட்டும் ஏற் படுத்தப்பட்டன போலும்! இவ்வாறு கூறுவது ஆகமங்களை முற்றும் மறந்து பேசுவதாகும். இந்தத் தனிக் கோயில்களை யார் கட்டுவது என்ற கேள்வியும் எழுகின்றது. எ எனவே, இன்றைய தினம் சைவரும் ஸ்மார்த்தரும் சண் டையிட்டுக் கொள்வது இந்தக் கோயில் வருமானங்கள் மீது தங் கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும், அதிகாரம், அந்தஸ்து செல்வாக்கு முதலிய லௌகீக காரியங்களைப் பெறவுமே யன்றி வேறல்ல. கோயில் வருமானங்கள் எக்காலத்தும் பிறர் கவனத் தைக் கவர்ந்து வருகின்றன. சுவாதீனம் என்பது சட்டத்தில் மிக முக்கியமான காரிய மாகும். சாதி இந்துக்கள் எவ்வாறு இந்தக் கோயில்களைத் தம் வசப்படுத்தினார்கள் ? இந்தக் கோவில்களின் வருமானங்களை யெ டுக்க அவர்கள் ஏன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்? ஸர்க்கார் ஆதிக்கத்திற்குட்பட்ட போர்டு, கண் காணிக்கும் கமிட்டிகள், அல்லது டிரஸ்டிகள் மூலம் தங்களிஷ்டம் போல் இவற்றை நிர்வகிக்க என் விடப்பட்டிருக்கிறது ? இவற்றை யெல்லாம்