பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 105 இந்துக் கடவுள்களுக்கு வாகனங்களாகவும், துணைவர்களாகவும் அமைக்கப்பட்டன. ஒரு கடவுளுக்கு மயில் வாகனம்; மற்றொரு வர் அன்னத்தின் மீதேறுகிறார். ஒரு கடவுள் எருதையும், மற் றொரு கடவுள் ஆட்டையும் வாகனமாகக் கொண்டிருக்கின்றனர். ......மிக உயரிய நாகரீக மெய்தியுள்ள திராவிடர்களோடு சேர்ந்த தினால், வேத மதம் ஆஸ்திக மதமாக மாறியது. திராவிடர்க ளுக்குச் சிறப்பான விக்கிரக வணக்கத்தை ஆரியர்களும் கைக் கொண்டார்கள். பல வடிவங்களையுமுடைய காளி தேவதை அனா ரிய, திராவிடத் தேவதை யென்பது வெளிப்படை..... ஆஸ்தி கரும், நாஸ்திகரும், கடவுள் நம்பிக்கையுடையவர்களும், நிரீச்சு வர வாதிகளும், சகலபேரும் இந்துக்களாகவே இருக்கலாம்; அவர் கள் இந்துமத சம்பிரதாயங்களை ஒப்புக்கொண்டாற்போதும். இந்து மதத்தை ஒரு தனிக் கருத்தை அடிப்படையாகக் கொண் டதுஎன்று சொல்வதைவிட மனி தருடைய வாழ்க்கைமுறையைப் பற்றியது என்று சொல்வதே மிகப்பொருத்தமாக இருக்கும்” ஆகையினால்,இந்து யார் என்று விவரிப்பதில், திரு ஜே. ஸி. கோஷ் சொல்வதுபோல அவ்வளவு கஷ்டமில்லை. பல வரு ஷங்களுக்கு முன் கிறிஸ்தவர்களுக்காக இந்திய சட்டசபை ஒரு வார்சுரிமைச் சட்டத்தை மிக எளிதாக ஏற்படுத்தி, அதற்கு 'இந்தியர் வார்சுரிமைச் சட்டம்' என்று பெயருமிட்டு, இந்து, மகமதியர், சமணர், பௌத்தர், பார்சி முதலியோர் அல்லாத ஒவ்வொரு இந்தியனுக்கும் இது செல்லத்தக்கது என்றும் வரை யறுத்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் கிறிஸ்தவர்கள்தொகைமொத்த ஜனத்தொகையில் நூற்றுக்கு மூன்று வீதந்தான். இம்மாதிரிச் சட்டமியற்றினது மிகவும் வேடிக்கையான முறையாகும். ஆதி காலந்தொட்டே இந்தியாவில் நிலைபெற்று வரும் மதம் இந்து மதந்தான். இன்றுகூட, பிரிட்டிஷ் இந்தியாவில் மொத்த ஜனத் தொகையில் மூன்றிலிருபாகத்தினர் இந்துக்களாகவே இருக்கின் றார்கள். வட்டமேஜை மகாநாட்டில் டாக்டர் மூஞ்சே சொன் னதுபோல், இந்தியர் ஒவ்வொருவரும் இந்துவேயென்று சொன் னால் அதில் ஆச்சரியப்படத்தக்க தெதுவுமில்லை. இருந்தாலும், தென் இந்தியாவில் மாண்டு போர்டு சீர்திருத்தங்களின் படி