பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 113 டாக்டர் கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் அடியில்வருமாறு குறிப்பிடுகிறார்:- பல மத "பிற மத ஸ்தாபனங்களில் தலையிடுவது கிறிஸ்தவ கவர்ன் மெண்டாசாகிய தங்களுக்குத் தகாது என்பதை 1841-ல் உண ர்ந்த பிரிட்டிஷ் ஸர்க்கார், மதஸ்தாபனங்களின் நிர்வாகத்தை விட்டுவிடச் சிறந்த வழியென்ன வென்பதாக ஜில்லாக் கலக்டர் களுக்கு எழுதிக் கேட்டார்கள். அதன்படி, 1842-ல் ஸ்தாபனங்களை, டிரஸ்டிகள் வசம் ஒப்படைத்தார்கள். ஆனால் இந்த டிரஸ்டிகளில் பெரும்பாலோருக்கும் அவர்கள் வசம் ஒப் படைக்கப்பட்ட தர்ம ஸ்தாபனங்களுக்கும் யாதொரு சம்பந்தமு மில்லை. அவர்களுடைய அந்தஸ்தையும், தெய்வபக்கியையும் மதித்து, இந்தஸ்தாபனங்களை ஒழுங்காக நிர்வகிப்பார்கள் என்று கருதினார்கள். திருப்பதி, திருவள்ளூர் கோவில்கள் இவ்வாறே ஒப்புவிக்கப்பட்டன. இந்த நோக்கத்தை நன்கு நிறை வேற்றவும், மதஸ்தாபனங்களின் பராமரிப்பைப் பாதுகாக்கவுமே, 1863-ம் ஆண்டில் தேவஸ்தானச்சட்டமும் ஏற்படுத்தப்பட்டது." மத ஸ்தாபனங்களின் பரிபாலனத்தை கிறிஸ்தவ ஸர்க்கார் விட்டுவிடும்படி வற்புறுத்தியது, புராட்டஸ்டண்டு கிறிஸ்தவப் பாதிரிமார்களென்பதும், அவ்வாறு நிர்வாகமாற்றம் 1842-முதல் 1863 வரை நிகழ்ந்ததென்பதும் மேற்குறிப்பிட்ட எடுத்துக் காட்டுகளினின்றும் தெளிவாகும். வருணாசிரம தர்மிகளும், சனா தனதர்மிகளுமான நமது நண்பர்கள் அக்காலத்தில் இருந்தவிட மே தெரியாது. இந்த ஸ்தாபனங்களிலிருந்து கிடைத்து வந்த ஏராளமான வருமானத்தைக் கிறிஸ்துவ ஸர்க்கார் விடவேண்டிய காரணமென்ன? அவர்களுக்கு முன்னிருந்த முகமதிய, இந்து அரசாங்கங்கள் இவ்வருமானங்களைக் கைப்பற்றும் வழக்கத்தை "நெடுங்காலப் பழக்கவழக்க மாகத்தானே கைக்கொண்டிருந் தார்கள்? புராட்டஸ்டாண்டு மதப்பிரசாரம் அக்காலத்தில் எந்நிலை யிலிருந்தது, எவ்வளவுதூரம் முன்னேறியிருந்தது என்பதை நாம் அறிந்தால் இதன் உண்மை விளங்கும்.