பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 115 பெனியார்களுக்கு அளவு கடந்த பற்றுதல் உண்டாகவும், கிறிஸ் தவ மதத்தின் மீது நியாயமற்ற முறையில் அவமதிப்பு ஏற்பட வும் இடமாயிற்று. இந்தியாவிலுள்ள விக்கிரக ஆராதனைக்குக் கம்பெனியார் ஆதரவளிக்கும் விஷயம், ஸ்தலயாத்திரை வரி ஏற் பட்டபோது மிகக்கேவலமாக வெளிப்பட்டது. 1803-ல் ஒரிஸா ராஜ்யத்தை ஆங்கிலேயர் கைப்பற்றியபொழுது பூரி ஜகன்னாத புரியிலுள்ள நீலக்கடவுள் தம்மை ஆங்கிலேயர் இனிமேல் பாது காக்க வேண்டுமெனத் தமது விருப்பத்தை வெளியிட்டார். கோவில் பிராமணர்கள் கைக்கூலி கொடுத்து அவ்வாறு தெரிவிக் கும்படி செய்தார்கள். அதன்படி, கம்பெனியார் உடனேயே அந்தக்கோவிலையும் அதைச்சேர்ந்த ஏராளமான சொத்துக்களை யும் தங்கள் ஆதீனத்தில் எடுத்துக்கொண்டார்கள். முன் முகமதி வர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் ஏற்படுத்திய தீர்த்த யாத்திரை வரியைத் திரும்பவும் ஏற்படுத்தும்படி லண்டனிலிருந்து உத்த ரவு வந்தது. அவ்வமயம் கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்லெஸ்லி பிரபு இந்த உத்திரவை அமுல் நடத்த முடியாதென மறுத்தார். ஆனால் 1806-ம் ஆண்டில் இவருக்குப்பின் வந்த பார்லோ என் பவர், பூரியிலுள்ள சகல கோவில் சொத்துக்களையும் பிரிட்டிஷ் நிர்வாகத்தில் எடுத்துக் கொண்டதோடு, தீர்த்தயாத்திரைவரியை இரக்கமின்றி வசூலிக்கவுஞ் செய்தார். இதற்குப்பதிலாக, கோவில் கட்டிடங்களைப் பராமரிக்கவும், பூசாரிகளுக்குச் சம்பளங் கொடுத்து பூஜைகளைச் சரிவர நடத்தவும் கவர்ண்மென்றார் ஒப்புக் கொண்டார்கள். இதன் மூலம் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைத் தது. முதல் வருஷத்திலேயே ஒரு லட்சத்து முப்பத்தையாயிரம் ரூபாய்க்குமேல் லாபமடைந்தார்கள். 'ஜகன்னாதக் கடவுள் ஒன்று மேயில்லை யென்றால், அவரிடமிருந்து கம்பெனியார் அவ்வளவு பணத்தை லாபமடைவானேன்” எ என்றோ "உங்கள் மதம் உண்மையான மதமாயிருந்தால் உங்கள் அரசாங்கம் அதற்கு உதவி செய்யாதா? அவ்வாறு செய்யாமல் எங்களது தெய்வங்களை ஆதரிப்பானேன்" என்றோ இந்துக்கள் பாதிரிமார் களிடம் கேட்டபொழுது அவர்கள் பதிலளிக்க முடியாது தயங்கி னார்கள். பிஹார் தேசத்தில் கயா என்னும் ஊர் புத்தர் காலம்