பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 7-பிரிவுகளடங்கிய ஒரு சட்டத்தை வகுத்தார். அது வருமாறு 121 (1) சுதேசக் கோவில்களின் பூஜை முதலிய காரியா திகளின் நிர்வாகத்திலும், அனுஷ்டானங்கள், பூசாரிகள் மற்ற வேலைக்காரர்கள் இவர்களுடைய நடபடிகளிலும், தேர் திருவிழாக்கள் நடத்துவதிலும் பொதுவாகக் கோவில் சம் பந்தமான எந்த விஷயத்திலும் பிரிட்டிஷ் உத்தியோகஸ் தர்கள் யாரும் தலையிடக்கூடாது. (2) தீர்த்த யாத்திரை வரி எங்கும் ஒழிக்கப்படும். (3) கோவில் வழிபாடு, கோவில்களுக்குக் கொடுக்கப்படும் பணம் முதலிய காணிக்கை யாதொன்றும் இனி பிரிட்டிஷ் அரசாங்க வருமானங்களாகக் கருதப்படமாட்டாது எனவே ஈஸ்டு இந்தியக்கம்பெனி உத்யோகஸ்தர்கள் இவற்றைச் சேகரிக்கவோ வசூலிக்கவோ கூடாது. உ (4) கோவில் சம்பந்தப்பட்ட பண வசூலை வசூலிப்பதிலோ, நிர்வகிப்பதிலோ கம்பெனி உத்யோகஸ்தர்கள் எவ்விதத்தி லும் தலையிடக்கூடாது. (5) கம்பெனி உத்யோகஸ்தர்கள் யாரும் கோயில் ஆதாயங்களி லிருந்து சம்பளமோ வெகுமானமோ பெறக்கூடாது. (6) கோவில் சம்பந்தமாகவுள்ள வழிபாடு, திருவிழா முதலிய சடங்குகளை யெல்லாம் அந்தந்த மதஸ்தர்களே நடத்திக் கொள்ளும்படி விட்டுவிடவேண்டும். (7) கோவில் வழிபாட்டிற்குச் செல்லும் பிரயாணிகளுடைய பாதுகாப்புக்காகப் போலீஸ்காரர்கள் ஏற்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டால், அந்தச்செலவு அரசாங்கத்தின் பொதுவருமானத்திலிருந்து செலவு செய்யப்படவேண்டும்.