பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 13 வில்களின் ஸ்தாபனத்துக்கும், வழிபாட்டுக்கும், பரிபாலனத்துக்கும் பார்ப்பனரல்லாத மக்களே பணங்கொடுத்திருக்கிறார்கள் என்பதில் எள்ளள வும் சந்தேகமில்லை. இன்றையதினம் இவர்களிற் பெரும்பாலாரைக் கோவிலுக்குள் போகக்கூடா தென்றும், போகக்கூடியவர்கள் இரண்டாவது சுற்றுப்பிரகாரம்வரைத்தான் செல்லலாமென்றும் தடுக்கிறார்கள்." அத்தியாயம் 3. பொ இந்தியாவிலுள்ள பண்டைக்காலக்கோவில் ஒவ்வொன்றும், வழிபடுகிறவர்களிடமிருந்து காணிக்கையாக ஏராளமான ருளை இக்கோவில்மூலம் வசூலிக்கலாமென எதிர்பார்த்த அரசர் களாலேயே ஸ்தாபிக்கப்பட்டதாகும். இதைத் தவிர மத சம்பந்த மான குறிக்கோளுடனோ, அன்றி மோட்சத்தை உத்தேசித்தோ ஸ்தாபிக்கப்படவில்லை. இது பொருள் தேடுவதற்குரிய அரசியல் தந்திரங்களில் ஒன்றாகும். இன்று அரசாங்கச் செலவுகளுக்காக ஜன ங்களைக் கள் குடிக்கச் செய்வதுபோல அக்காலத்து அரசர் கள் கோவில்களை ஏற்படுத்திப் பொருள் சேர்த்துவந்தார்கள். இக் கொள்கை மனுஸ்மிருதிக்கு முன்னரிருந்தே கைக்கொள்ளப்பட்டு வருவதாகும். இக்காலத்தும், அரசாங்கத்தார் அனுமதியின்றிக் குடிஜனங்கள் கோவில் கட்டக்கூடாது என்ற முறையானது இந் திய சுதேச சமஸ்தானங்களில் கைக்கொள்ளப்பட்டு வருவதைக் காணலாம். இதிலிருந்து, முன்காலத்தில், ஆலயம் கட்டும் அதி காரம் அரசர்களுக்கு மட்டுமே உரித்தாயிருந்தது என்பது வெளி யாகின்றது.