பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 15 பேய்க்கூச்சலிடும்படியாக அரசன் ஏற்பாடுசெய்யவேண்டும். இந்த துஷ்ட தேவதையைச் சாந்தப்படுத்தி அனுப்பாவிட்டால் நகரத் துக்குப் பெருங்கேடு விளையுமென்று ஜனங்கள் நம்பி, அதைச்சாந் தப்படுத்த அவர்கள் முயலும்படி செய்யவேண்டும். அரசரது ஒற்றர்கள் சந்நியாசிகள் மாதிரி வேடம் பூண்டு இந்தத் தந்திரத் தைச் செய்து பணத்தை வசூலிக்கவேண்டியது." பிசாசு நக ரத்தை விட்டுப் போய்விடுகிறது; பணம் அரசரது பொக்கிஷத் தைச் சேர்கிறது. அந்தக் காலத்தில் அரசனுக்குப் பணம் தேடிக் கொடுக்கும் வேலை, அதிகாரிகளுக்குக் கடுமையான வேலையாகவே இருந்திருக்கவேண்டும். வ பாம்பைக் காட்டிப் பணம் பறிக்கும் தந்திரம் இதைவிட விசித்திரமானது; இது இன்றுங் கூடச் சிறிது மாற்றத்துடன் -ஒரு கோவிலிலாவது-இருந்துவருவதாகத்தெரிகிறது. சாணக் கியர் காலத்தில் 'தீர்த்தம்' எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கு மென்பதை எளிதாக உணர்ந்துகொள்ளலாம். சாதாரணமாக எளிதில் இம்மாதிரி விஷயங்களை நம்பாத மக்களிடத்தில்தான் இந்த 'தீர்த்தம்' உபயோகிக்கப்பட்டது. இதை அவர்களுக்கு நம் பிக்கையூட்டும் 'மருந்'தாக உபயோகித்தார்கள். ஆனால், இந்த தந்திரங்களையெல்லாம் அரசருடைய காரியத்துக்காக உபயோகித் தார்களேயன்றி இன்று நடப்பதுபோல ஒரு சிலருடைய சுயநல வாழ்வுக்காகவன்று என்பதை ஞாபகத்திலிருத்திக்கொள்ளவேண் டும். தந்திரம் இரண்டும் ஒன்றுதான். "பார்ப்பான், தன்னலத்தையும் ஆதாயத்தையுங் கருதி, கோ விலில் வழிபடுகிறவர்களை ஏமாற்றிப் பணம் பறிக்க எவ்வித தந்தி ரத்தையும் உபயோகிப்பான்" என்று பிரஞ்சுப் பாதிரியாரான கற்றறிந்த ஆபி டுபாய் ஒரு நூற்றாண்டுக்குமுன் எழுதியிருக்கிறார். மேலும் சாணக்கியர் கூறுவதாவது:- "அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒருமரம் அகாலமாசப் பூக்கவோ, காய்க்கவோ செய்திருந்தால் அதில் கடவுள் தோன்றி யிருக்கிறார் என்று பொதுஜனங்களிடம் காட்டிப் பிரசித்தப்படுத்த வேண்டும்."