பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 ஆலயப் பிரவேச உரிமை. "மதுவருந்தித் தம் அழகிய வைப்பாட்டிகளுடன் தூங்கும் உண்மையான அல்லது போலி ஆரியர்களின் தோற்றத்தை சாரா யக்கடை சொந்தக்காரர்கள் பாதி மூடியிருக்கும் அறைகளில் ஒளித்திருந்து கவனித்துக்கொள்ளவேண்டும்." இவை சாணக்கி யர் வகுத்துள்ள சட்டங்கள். விக்கிரகங்களையும், ஆலயங்களையும் விட அரசாங்க சாராயக் கடைகளே மிகவும் பழமையான ஸ்தாபனங்கள் என்பதை வருணா சிரமதர்மிகள் ஒப்புக்கொள்ளவேண்டும். இன்று இந்தியாவிலிருக் கும் எந்த ஸ்தாபனத்தையும் "பண்டையப் பழக்க வழக்கம்", "முன் நடப்பு" என்ற காரணத்தைக்கொண்டுமட்டும் நிலைநிறுத்த வேண்டுமென்றிருந்தால் இப்பொழுது நடை டைமுறையிலிருக்கும் "பூரண மதுவிலக்குப் பிரசார”த்தைவிட அதற்கு ஆபத்தைத் தரக்கூடியது வேறொன்றுமேயில்லை. சாணக்கியர் காலத்தில் இவ் விதப் பிரசாரம் மிக மிகப் பெரிய மாஜத்துரோகமாகக் கருதப்பட் டிருக்கும். இது நிற்க, சாணக்கியர் காலத்தில் சகல ஜாதி ஆண்களுக்கும், பெண்க ளுக்கும், குழந்தைகளுக்கும் அரசாங்கத்திலிருந்தே புதிய சாரா யம் கொடுக்கப்பட்டது என்பதைக் கவனிக்கவேண்டும்; அவரவர் சக்திக்கும், திருப்திக்குந் தக்கபடி சாராயம் அளிக்கப்பட்டது. விலை மிக நியாயமானது. தூய குணமுடைய ஆரியர்'க்குக்கூட அதிகக் கஷ்டமில்லாமல் கிடைக்கும், இந்த சாராயக்கடைகளில் தனிச் சாப்பாட்டு அறைகளும், படுக்கையறைகளுமிருந்தன. இவை மட்டுமா? பருவ கால மாற்றத்துக்குத்தக்கபடி சௌகரிய மான சாமானங்கள்! இவற்றுடன் வாசனைத் திரவியங்கள், பூமாலை கள், தண்ணீர்! இவையெல்லாவற்றையும்விட, யாரையும் கவரத் தக்க "அழகிய விலைமாதர்கள் இவற்றையெல்லாம் மதுபான இலாகாத் தலைவர் ஏற்பாடு செய்யவேண்டும். ஒருவர், ஆரியமா யினுஞ் சரி, அனாரியராயினுஞ் சரி, இவற்றைத் தவிர அவருக்கு வேறென்ன வேண்டும்? ஒரு காலத்தில், இத்த அரசாங்க "சாராய ஸ்தாபனங்க"ளு டன் அரசாங்க "மத ஸ்தாபனங்க"ளும் ஒன்றுசேர்க்கப்பட்டிருக்க