பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 47 "ரெவனியூ போர்டார் இந்தக்கோவில்களின் நிர்வாகத்தை வைத்திருப்பதைப் பலர் ஆட்சேபித்தார்கள். இவ்வாறு ஆட்சே பித்தவர்கள் இந்துக்களல்ல; ஆனால், கிறிஸ்தவப் பாதிரிகளிடமி ருந்தே ஆட்சேபங் கிளம்பியது.விக்கிரக ஆராதனையுடைய கோவில் களைக்கிறிஸ்தவ கவர்ன்மெண்டார்பரிபாலிப்பதை அவர்கள் எதிர்த் தார்கள். அவர்களிட்ட பெருங் கூக்குரலைக்கேட்டு, கோவில்களை யும், மதஸ்தாபனங்களையும் யார் யாரிடம் ஒப்புவிக்கலாமென் பதைப்பற்றி அறிக்கையனுப்புமாறு 1841-ல் கவர்ன்மென்றார் கலக்டர்களுக்கு உத்தரவிட்டார்கள். அதுவரை இது சம்பந்த மாக அமுலிலிருந்த சட்ட திட்டங்களெல்லாம் ரத்து செய்யப்பட்டு 1863-ல் 20-வது சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி கோவில் களையும், தர்ம சொத்துக்களையும் பரிபாலிக்கும் பொறுப்பு ரெவ னியூ போர்டாரிடமிருந்து நீக்கப்பட்டு, டிரஸ்டிகள், கமிட்டிகள், மானேஜர்கள்வசம் ஒப்புவிப்பதற்கு வழிசெய்யப்பட்டது" என்று மிஸ்டர் கோஷ் சொல்லுகிறார். இந்துச் சட்டத்தில் ஒரு சிறந்த அறிவானியென பிரிவி கௌண்ஸில் வரையிலும் பேர்பெற்ற தாகூர் சட்ட விரிவுரையாள மான மிஸ்டர் கோஷ் சொல்லுவதை நம்புவதாக இருந்தால், இன்றைய தேவஸ்தானக்கமிட்டிகளும், டிரஸ்டிகளும் ஏற்படுவ தற்குக் காரணம் பிராமணரது ஸ்மிருதியோ, சைவாது ஆகமமோ வர்ணாசிரம தர்மியுடைய சாஸ்திரமோ, பழக்கமோ, மாமூலோ அல்ல; ஒரு இந்துவுங்கூட அல்லவென்றும், ஆனால் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டார் ‘அஞ்ஞானிக'ளின் கோவில்களைத் தம் கையில் வைத்திருக்கக்கூடாது. என்று போமாடிய கிறிஸ்துவப் பாதிரி களே இதற்குக் காரணமென்றும் அறிவோம். இதைப்பற்றிப் பின்னர் விரிவாகக் கூறுவோம். ஒரு அரசாங்கம், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மதத்தைக் கைக்கொண்டுவிட்டால், அந்த அரசாங்கத்தில் இதா மதங்களை யும், மதஸ்தாபனங்களையும் போற்றுவதற்கு இடமில்லை. இதே காரணத்தாலேயே கத்தோலிக்க ராஜியங்களில், புராட்டஸ்டன்று ஸ்தாபனங்களையும், புராட்டஸ்டன்று ராஜியங்களில் கத்தோலிக்க