பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அத்தியாயம் 8. இந்து மதஸ்தாபனங்களின் பரிபாலனத்தைப் பிரிட்டிஷ் அரசாங்கத்தார், இந்து மதத்தைச் சேர்ந்தவர்களிடம் ஒப்புவித்த காலத்தில்-அதாவது 1842-ம் ஆண்டு முதல் 1863-ம் ஆண்டு முடிய-இந்து சமுதாயம் எந்நிலையிலிருந்தது என்பதை ஆராய் வோம். அக்காலத்தும், அதற்கு முன்னதாகவும், இந்துக்களில் அதிகப் படிப்புடையவர்களாகவும், அரசியலறிவு முதிர்ந்தவர் களாகவும் இருந்தவர்கள் பார்ப்பனர்கள்தாம். இந்தியாவில் எப் பொழுதும் மிகப்பெரிதாக மதிக்கப்படும் "உத்தியோக" சாதி யில் நிரம்பியிருந்தவர்களும் பார்ப்பனர்களே. இற்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன் (1816-ல்) பிரஞ்சுப் பாதிரியான ஆபிடூபாய் அடியில்வருமாறு எழுதியிருக்கிறார்:- "இந்தியாவைத் தற்பொழுது ஆண்டுவரும் ஐரோப்பியர்களை வெகு சாமர்த்தியமாசப் பார்ப்பனர்கள் தம் வசப்படுத்திக் கொண் டார்கள். பல ஜில்லாக்களிலுமுள்ள ஸர்க்கார் உத்தியோகங்களில் உயர்ந்தவைகளையும், அதிக வருமானமுள்ளவைகளையும், நீதி ஸ்தாபனங்களையும், மற்றுஞ்சகல உத்தியோகத்துறைகளையும் பார்ப் பனர்களே கைப்பற்றியிருக்கின்றார்கள். உண்மையில், ஸர்க்கார் உத்தியோகங்கள் ஒன்றாவது அவர்களில்லாது போனால் நடவாது என்று கருதக்கூடிய நிலையில் பார்ப்பனர்கள் நிறைந்துவிட்டார் கள். மேலும் சப் கலக்டர்களாகவும், குமஸ்தாக்களாகவும், மொழி பெயர்ப்பாளர்களாகவும் கஜான்ஜிகளாகவும், கணக்கர்களாகவும், மற்ற சிப்பந்திகளாகவும் பெரும்பாலும் பார்ப்பனரே நிரம்பி யிருக்கின்றார்கள். அவர்கள் சாமர்த்தியம் வாய்ந்த கணக்கர்களாக இருப்பதால், கணக்குகள் சம்பந்தப்பட்ட சகல விஷயங்களிலும் அவர்களுதவியில்லாமல் எதையுஞ் செய்வது மிகக்கஷ்டமா காரியமாக இருக்கும். மான