பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 65 University) திரு. P. T. சீனிவாச ஐயங்கார் அவர்கள் ஆகமங் களைப் பற்றி அடியில் வருமாறு குறிப்பிடுகிறார்:- "வைதீக சாஸ்திரங்கள் மக்களை நான்கு வருணங்களாக வகுத்து, நான்காவது வருணத்தைச் சேர்ந்தவர்களை வேதம், வேதாந்தங்களைப் படிப்பதினின்று நீக்கவும் செய்தன. மக்களை நான்கு வர்ணங்களாக வகுத்ததி னின்றும் வர்ணாசிரம தர்மம் ஏற்பட்டு தர்மங்கள் வருணங்கட்கிடையே வகுக்கப்பட்டன. இதன் முடிவு பிராமணன் மட்டும் சன்னியாசியாகலாமென்றும் சன் னியாசத்தைப் பயின்றால் மட்டுமே மோட்சம் கிடைக் கு மென்றும் ஏற்பட்டது. அதாவது வைதீக முறைப் படி, பிராமணர்கள் மட்டுமே மோட்சம் பெறலா மென்பதாகும். ஆகமங்களோ இந்தக் கோட்பாடுகளை யெல்லாம் எதிர்த்து நின்றன. ஒரு சண்டாளனுங் கூட) ஆகமப்படி விஷ்ணு அல்லது சிவனுடைய விக் கிரகத்தைப் பெற்று அதற்குப் பூஜை செய்யலாம். தாழ்ந்த வகுப்புகளைச் சேர்ந்த சிவனடியார்கள் சிவன் கோவிலுக்குள் சென்று தரிசித்திருப்பதைப் பெரிய புராணம் குறிப்பிடுகின்ற து. கண்ணப்ப நாயனார் காள கஸ்திக் கோவிவில் சிவனுக்கு இறைச்சியைக் கொடுத் தார். எட்டாவது நூற்றாண்டிலிருந்த பாணனாழ்வார். மிகக்கேவலமான வகுப்பைச்சேர்ந்தவர். அவரது வகுப்பார்கள் ஸ்ரீரங்கம் கோவிலைச்சுற்றியுள்ள தெரு வீதிகளிற்கூட நடக்கக்கூடாது. ஆனால், அவரையும் ஆழ்வாராக்கிக் கோவிலில் வைத்துப் பூஜித்து வருகின் றார்கள். நான்குசாதிப் பாகுபாட்டை ஆகமங்கள் அங் கீகரிக்கவில்லை. ஆனால் வேதத்தில் ஒரு பகுதியான வேதாந்தமோ சூத்திரர்கள் பயிலக் கூடாததாக இருந்தது. கிரியைகள் மூலம் பரிசுத்தமடைய சூத்தி ரர்களுக்கு உரிமையில்லையா தலால், அவர்கள் வேதங் களைக் கேட்கவோ, படிக்கவோ கூடாதென பாதராய ணர் எழுதியிருக்கின்றார். ஆனால் இதற்கு நேர்மாறாக