பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 71 யென்றும் ஸ்மிருதிகள் கூறுகின்றன" என்பதாக மிஸ்டர் ஜே ஸி. கோஷ் என்னும் வங்காள தாகூர்சட்டவிரிவுரையாளர் கூறுகின்றார். திரு.பி. டி. சீனிவாசய்யங்கார் அவர்கள் அடியில் வருமாறு குறிப்பிடுகின்றார்:- "பிராமணர்கள் நடத்திவந்தயாகம் முதலானவைகளெல்லாம் பொதுமக்களுடைய மதத்தைச் சேர்ந்தவையல்லவென்பதை நாம் உணரவேண்டும். ஏனெனில், அவற்றில் பிராமணர்கள் மட்டுமே கலந்துகொள்ளமுடியும். அரசர்களும், தனவந்தர்களும், வியாபாரி களும் அவற்றிற்குப் பொருளுதவி செய்தாலும், அந்தக் கிரியை களில் நேரிற் பங்கு கொள்ள அவர்களுக்கு உரிமையில்லை. ஆகம விதிப்படியுள்ள வழிபாடோ அக்னியோடு யாதொரு சம்பந்தமு மில்லா ததா லும், வேதமந்திரங்களை ஒதவேண்டிய அவசியமில்லா த தாலும், இந்த ஆகம வழிபாடானது பண்டைக்காலத் திராவிட மக்களின் கிரியைகளினின்றும் உற்பத்தியாகியிருக்க வேண்டும். அந்த வேத காலத்திலேயே சாதாரண மக்கள் அக்னி சம்பந்த மற்ற கிரியைகளை நடத்தியே வந்திருக்கவேண்டும். ஆகையினால் சூத்திரன் பூசாரியாகவுள்ள எந்தக் கோவிலி லாவது பிராமணன் சென்று வணங்குவதில்லை. சூத்திரனைவிடத் தாழ்ந்திருக்கும் ஆதிசைவர்கள் பூஜை செய்யும் கோவிலில் பிராம ணர்கள் தரிசித்திருக்கமாட்டார்கள். ஏனெனில், ஆகமங்களுக்குச் சாதிவித்தியாசங்கிடையாது; இந்தக் கோவில்களும் சாதிவித்தியா சம் பாராட்டாமலே ஏற்படுத்தப்பட்டன; பூசாரியும் இன்ன சாதி யில் சேர்ந்தவன் தான் என்று வரையறுக்கவுமில்லை. எனவே, தென்னிந்தியாவில் இன்று ஆகம முறைப்படி வழி பாடு நடைபெறும் ஒவ்வொரு பொதுக்கோவிலிலும், ஆதிசைவன் பூஜை நடத்தும் ஒவ்வொருபொதுக்கோவிலிலும் எத்தகையவித்தி யாசமுமின்றி சகல இந்துக்களும் சென்று வழிபட உரிமையுண்டு. சட்ட ரீதியாகவோ, சரித்திர ஆராய்ச்சிப்படியோ அல்லது மதத் தின் படியோ எவ்விதம் பார்த்தா லும் தென் இந்தியாவில் ஏற்பட் டுள்ள பொதுக்கோவில் எதுவும் பிராமணர்க்கோ அன்றி இரு பிறப்பாளர்களான உயர் சாதிக்காரர்களுக்கோ ஏற்படுத்தப்பட்ட