பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 77 டது; இன்னும் செய்யப்பட்டுவருகிறது." சில சந்தர்ப்பங்களில் பிராமணர்களால் தூண்டப்பட்டு சங்கராச்சாரியார் "கோவிலு லுக் குள்ளேகூட தங்குவதுண்டு." இவையெல்லாம் ஆகம சாஸ்திரங் களுக்கு முற்றும் விரோதமானவையாகும். சில பொதுக்கோவில்களில் "சூத்திரப்பூசாரிகளை, தர்மகர்த் தாக்கள் தமது அறியாமையால் நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதி லாகப் பிராமணர்களை நியமித்திருக்கின்றார்கள். இது காரணத் தால் இந்த ஆலயங்களில் ஆகம முறைப்படி வழிபாடு நடத்தப் படவில்லை." ஆகமங்கள் பூராவாகக் கைவிடப்பட்டு, ஸ்மிருதிகளை அடிப் படையாகக்கொண்ட பிராமணீயக்கிரியைகள் மட்டும் நடத்தப் படுவதற்கு எடுத்துக்காட்டாக இன்னும் பல உதாரணங்களைக் காண்பிக்கலாம். பிரிட்டிஷார் இந்தியாவைக் கைப்பற்றின பிற் பாடு, அவர்களுடைய ஆதரவில் தென்னிந்திய இந்து சமூகத் தில் பிராமணர்கள் ஆதிக்கமும் பதவியும் பெற்ற காலத்தில் இது ஏற்பட்டது. கோவில் பூசாரி, கமிட்டியார், தர்மகர்த்தாக்கள் இவர்கள் அனைவரும் ஆகமத்தைப்பற்றிச் சிறிதேனும் தெரி யாதிருந்ததும் தங்களது ஸ்மிருதிகளைப் பரப்பவேண்டுமென்று அக்கரைகொண்டிருந்த பார்ப்பனரது ஆதிக்கமும் இவ்வாறு ஏற்படக்காரணமாயின. இன்று பொதுக்கோவில்களில் கடைபெற் றுவரும் கைங்கரியங்களெல்லாம் ஆகமப்படியோ, பழக்கவழக் கத்தின்படியோ நடக்கவில்லை. ஆனால் அதற்கு ளேமாறாக. இந்தக்கோவில்களெல்லாம் எந்த விதிகளின்படி ஸ்தாபிக்கப்பட் டனவோ அந்த விதிகளையே புறக்கணித்துவிட்டன. இன்றைய ஆலயவழிபாட்டு முறை சகல மதவி திகளுக்கும் எதிரிடையானது. ஆகையினால், ஆலய வழிபாட்டினின்றும் யாரையுந் தடுப்பதா னது மகத்துக்கு மாறுபாடானது என்பது மட்டுமன்றி, கோ விலின் ஸ்தாபனத்துக்கே எதிரிடையான துமாகும். ஏனெனில், நாம் ஏற்கனவே கண்டபடி தென்னிந்திய ஆலயங்கள் அனுச ரிக்கும் ஆகம தத்துவப்படி தீண்டத்தக்க அல்லது தீண்டத்த காத எந்த இந்துவையும் ஆலயத்தினுள் பிரவேசிக்கவோ, வழி படவோ தடுக்க இடமில்லை.