பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

84 ஆலயப் பிரவேச உரிமை. கிருேம். இக்காட்டின் தென்பாகங்களுக்கும் வெளிகாட்டிற்கும் எளிதாகப் போக்குவரத்து ஏற்பட்டிருப்பதும், மதுரை, திரு நெல்வேலி, கோயம்பத்தூர் முதலிய ஜில்லாக்களுடன் இந்தப் பாகங்கள் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பும் இதற்குக்கார ணமாசுவிருக்கலாம். இந்த ஜில்லாக்களிலேதான் திராவிட வர்க் சத்தினர் செழித்தோங்கி தங்களுடைய சிற்பத்திறமையை விளக் கும் பெரிய கட்டிடங்களைக் கட்டியிருக்கின்றனர். தெற்கேயுள்ள தாலூக்காக்களிற்சில பாண்டியன் முதலிய மன்னர் ஆட்சிரி லிருந்தன. திருவிதாங்கூர் அரசர்கள் அவற்றைக் கைப்பற்றித் தம் ராஜ்யத்தோடு சேர்த்தனர்" "சமணர்களும் பௌத்தர்களும் கட்டின கட்டிடங்களின் சில பரகங்களு மிப்பொழுகிருக்கின்றன. "திராவிடச் சிற்ப முறையைத் தவிர்த்து சுதேசச் சிற்ப முறையொன்று மிருக்கிறது. இந்த முறையிற் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்குத் திராவிடர் கட்டிடங்களைப் போன்று பெரும் பணச் செலவு அவசியமில்லை; அவை அவ்வளவு பெரியதாகவு மிருப்பதில்லை. ஆனால் வெளிச்சமும், காற்றும் தாராளமாக உன் ளே வரும் விதத்தில் அவை சுத்தமாக எளிய முறையிற் கட்டப் பட்டிருக்கின்றன. இக் காரணத்தால் திராவிடருடைய பெருஞ் செலவு பிடித்த கட்டிடங்களைவிட சுதேசப் பணியானது உயர்ந் தது என்பதிற் சந்தேகமில்லை. சுதேசப் பணி மலையாள தேசத் துக்கே விசேஷமானது; இதைப்போன்ற பணி இந்தயாவில் வேறெங்கு மிருப்பதாகத் தெரியவில்லை. இப்பணி முறையில் மரவேலை அதிகமாக நிரம்பியிருப்பது இதன் முக்கிய லட்சண மாகும். மலையாள தேசக்கட்டிட முறையானது நேப்பாள தே சத்திலும், திபேத்திலும் காணப்படுகிறது. இந்தக் காரணத் தைக்கொண்டும் வேறு பல காரணங்களைக்கொண்டும், இவ்விரு தேசங்களுக்கும் ஒரு காலத்தில் மலையாள தேசங்களுடன் செருங் கிய சம்பந்தமிருந்திருக்குமென்பதில் சந்தேகமில்லையென ஸர். ஜேம்ஸ் பெர்கூஸன் (Sir James Fergusson) என்ற பேர் பெற்ற சிற்ப ஆசிரியர் சொல்லுகின்றார். ஆனால் எக்காலத்தில்