உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள். இடைப் பாயிரம். முதல் அதிகாரம்.....கடவுள் வாழ்த்து

அஃதாவது, கடவுளை வாழ்த்துதல். வாழ்த்து என்பது முதனிலைத் தொழிற்பெயர். 
 க. அகர முதல வெழுத்தெல்லா 
                            மாதி
    பகவன் முதற்றே யுலகு பொருள். எழுத்தெல்லாம் அகரம் முதல-- எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக வுடையன; (அது போல) உலகு ஆதி பகவன் முதற்று - அது போல, உலகம் முதற் கடவுளை முதலாக வுடைத்து,
 அகலம். எகாரம் அசை. அசை என்பது இசையை நிறைப்பதற்காக நிற்கும் எழுத்து அல்லது சொல். அது போல என்பது எஞ்சி நிற்றலை எடுத்துக்காட்டுவமை' என்பர் பரிமேலழகர்; 'இசையெச்சம்' என்பர் சேனாவரையர். முதற் கடவுள்- ஒரு பெயரோ, ஓர் உருவோ, பெறாது நிற்கும் மெய்ப்பொருள். முதல் - முதற் காரணம், சடத்திற்கு முதற்காரணம் மண். எல்லாவித ஒலி' யெழுத்துக்களுக்கும் அகர வொலியெழுத்து முதற்காரண மாதல் போல, எல்லா உலகப் பொருள்களுக்கும் மெய்ப்பொருள் முதற் காரணம் என்ற வாறு,

கருத்து. உலகத்திற்கு முதற் காரணம் மெய்ப் பொருள்.

1.உ,கற்றதனா லாய 
      பயனென்கொல் வாலறிவ
  னற்றா டொழாஅ ரெனின், பொருள். , வால் அறிவான் நல் தாள் தொழார் எனின்--

தூய அறிவினனது நல்ல அடிகளை வணங்கார் என்றால், கற்றதனால் ஆய பயன் என்--(மாந்தர் பல நூல் களையும்) கற்றதனால் உண்டாய பயன் என்ன?

101