பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

பட்ட வட மொழி வேதமானது ஓதி யுணரப்படுதற் கரி தென்று, வள்ளுவர் அவை உலகம் கொள்ளக் குறள் மொழிந்தார்- திருவள்ளுவர் அவற்றை உலகத்தார் எளிதி னுணரும்படி திருக்குறளைக் கூறினார்.

முன் பறிய வெனவே, உற்சர்ப் பிணியாகலின், அக் காலத்தோர்க்கு உணர்தற் கேற்ற ஆயுணீட்சியும் உணர்வு வலியும் இருந்தனவென்பதூஉம், அவசர்ப் பிணியாகலின் இக் காலத்தோர்க்கு அவையில வென்பதூஉம் பெறப்பட்டன. இவ் விரண்டும் "அவா வறுத்தல்" முதற் பாட் டுரையிற் காண்க, தேய வழக்கிற் படாததும் வருந்திக் கற்போர்க்கு மாத்திரம் புலப்படுவதுமாய் எல்லா மொழிகட்கும் முற்பட்டுக் கடவுள் மொழியாய் நிற்றலின், முது மொழி யென்றார். அறம் முதலிய நான்கும் பிரிவுபட்டுத் தோன்றாமையை உடைத் தாகலின், உள்ள வரி தாயிற்று. பழைய வேதம் உளதாகவும் வே றிது சொல்லுதற்குக் காரணம் உணர்த்திய படி (௩௰௨)

மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க்கிழார்.

புலவர் திருவள் ளுவரன்றிப் பூமேற்
சிலவர் புலவரெனச் செப்ப-னிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றுங்
கறங்கிருண்மா லைக்கும் பெயர்.

இ-ள். பூமேல் புலவர் திருவள்ளுவ ரன்றிச் சிலவர் புலவ ரென்ச் செப்பல் - பூவுலகின்கண்ணே புலவர் திருவள்ளுவரை யன்றி வேறு சிலரையும் புலவ ரென்று சொல்லுதல், மாலை நிலவு பிறங்கு ஒளி மாலைக்கும் பெயர் மற்றும் கறங்கு இருள் மாலைக்கும் பெயர் (செப்பல்) - மாலை யென்பது நிலவால் விளங்குகின்ற அந்திக்கும் பெயராக மற்றும் சூழ்கின்ற இருளை யுடைய அந்திக்கும் பெயராகச் சொல்லுதல் போலும்.

38