பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

66


திருவள்ளுவர் திருக்குறள்

வசம் உடையவன், பகை நோக்கி உறா மனமே—பகைவர்களைக் கருதிச் செல்லாத மனமே! கடைகா—(இனி உன்னால் என்ன பயன்?) பகைவர்கள் வாயிலைக் காப்பாயாக; துஞ்சாது உருகு—தூங்காமல் உருகுவாயாக; ஆவித்து உவ—கொட்டாவி விட்டுச் சந்தோஷ மடைவாயாக; யான் செய் ச தான் புணர் காயம் என உரைக்கும் வாளான்—(இது) தான் யான் உனக்குச் செய்யும் சகாயம் என்று கூறும் வாளை உடையான்.

அகலம். பகைவர் மேற் செல்லாத தன் மனத்தைப் பார்த்து வாள் குறிப்பினால் இகழ்வதாக அமைக்கப்பட்டது இச் செய்யுள். இச் செய்யுள் திரிபு என்றும் அலங்காரம் அமைந்துள்ளது. ‘ஒளிர்’ வினைத்தொகை. அருகா, கருகா, உறா என்பன தகரம் கெட்டு நின்றன, ‘தான்’ அசை, ச புணர் காயம்—சகாயம், (இச் செய்யுளின் பொருளும் அகலமும், இதற்கு அடுத்த செய்யுளின் பொருளும் அகலமும் மகாவித்துவான் மீனாச்சிசுந்தரம்பிள்ளையவர்களின் மாணாக்கராகிய சென்னை மகா மகோபாத்தியாயர் தக்ஷிணாத்ய கலா நிதி. டாக்டர். வே. சாமிநாத அய்யரவர்கள் எழுதித் தந்தவை.) இதுவும் குளகம்.

கருத்து. காவிக் கொடியும், முல்லை மாலையும், வாய்மையும், சிவ ஞானமும், பகைவர்களை வெல்லும் வாளும் உடையவன். (௰௧)

கந்துகத்தா னம்பரவு மாறு பொழிந் தெழுகளிற்றான் கருதார் மேற்பாய், கந்துகத்தா னம்பரவு சூடியடி யான்வாயிற் கட்டித் தூங்குங், கந்துகத்தா னம்பரவு மாதாவென் றுயிர்கருதிக் கரிசெ லாமி, கந்துகத்தா னம்பரவு ரவமாதி நீங்கவரங் கைக்கொண் டுள்ளான்.

பொருள். கந்து உக—கட்டுத்தறி குலையும்படி, தானம் பரவு மாறு பொழிந்து எழு களிற்றான்—மதநீர் எங்கும் பரவும்படி சொரி

66