பக்கம்:1946 AD-வி. ஓ. சி. கண்ட பாரதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

7 சந்திப்பும் பேச்சுமே என்னைச் சோழனாகவும் அவரைக் கம்பனுகவும் நான் நினைக்கும்படி செய்தது. பாரதியார் என்னை கடற்கரைக்கு அழைத்தார். நாங்கள் நால்வரும் திருவல்லிக் கேணிக் கடற்கரைக்குச் சென்று வெகு நேரம் அரசியல் விஷயங்களைப் பற்றிப் பரஸ்பரம் பேசிக்கொண்டிருந்தோம். வங்க மாகாணத் தின் சிங்கச் செயல்கள் பற்றியும் விபினசந்திர பாலரின் தேசபக்தி, பிரசங்கங்கள் முதலியவை பற்றியும் பாரதியார் மிகுந்த ஆவேசத்துடன் பேசினார். என் உள்ளத்தில் மின்மினிப் பூச்சி போன்று மின்னிக் கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்குப் போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது. உணர்ச் சிப் பெருக்கால் இங்கு எழுதியுள்ள இதே வாக்கியத்தை நான் பாரதியாரிடம் சொன் னேன். இதே சமயத்தில் கடற்கரை மின்சார விளக்குகளும் 'பளிச்'சென ஒளிவிட்டு எரிய ஆரம்பித்தன. பாரதி, "பிள்ளைவாள், சக்தி துணை செய் வாள். நம் உள்ள ஒளி பிரகாசிக்கும்போது