பக்கம்:1946 AD-வி. ஓ. சி. கண்ட பாரதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

9 அன்னைக்கா ஆடு பலி? ஒருநாள் மாலை. வழக்கம்போல நாங்கள் மூவரும் (பாரதி, ஆசாரியார், நான்) திருவல் லிக்கேணிக் கடற் கரையில் வார்த்தையாடிக் கொண்டிருந்தோம். எங்கெங்கோ சென்று பேச்சு வங்க வள கொண்டிருந்த எங்கள் நாட்டின்மீது திரும்பியது. அப்போது காளி தேவிக்கு வங்கத்தில் ஆடு பலி கொடுப்பதைக் கண்டித்து விபினசந்திரர் பேசிய பேச்சிற்கு மாமா உருக்கத்துடனும் ஆவேசத்துடனும் ஒரு வியாக்கியானம் செய்து முடித்தார் (இல்லை, பொழிந்து கொட்டினார்' என்று சொல்வது தான் பொருத்தம்). இவ் வியாக்கியானத் தைக்கேட்ட நான் கொழுத்த தேசாபிமானியாக மாறிவிட்டேன் (அதாவது இந்தக் காலத் திய தீவிரவாதி). இந்த வியாக்கியானத்தினால் நாங்கள் இருவரும் அதிகமாகப் பிணைக்கப்பட் டோம்; பெருமகிழ்ச்சி கொண்டோம். எங்கள் நட்பைப் பற்றி மாமா சொல்வார், பிள்ளைநமக்கினி யாரடா ஈடு ?" என்று. "மாப்