பக்கம்:1946 AD-வி. ஓ. சி. கண்ட பாரதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

47 கலெக்டர் மிஸ்டர் ஆஷ் துரை கொலை சம்பந்தமாக நான் ஏற்கெனவே அறிந்த வற்றைப் புதுவை நண்பர்களிடம் தெரிவித்து ஒப்பிட்டு உண்மையறிந்தேன். ஓட்டப்பிடாரம் மாடசாமிப் பிள்ளையையும் கண்டு பேசினேன். "மானம் பெரிது, பெரிது மானம்!' புதுச்சேரியில் பாரதியார் முலியோருடன் நான் தங்கியிருந்த நாட்கள், "தவலகுந் தொல்கேள்வித் தன்மை யுடையவர் இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ நுகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்து உம்பர் உறையும் பதி ' என்னும் பாவை அடிக்கடி நினைக்கவும், "உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்' என்னும் பாவின் உண்மைப்பொருளைக் காணவும் செய்தன. கடைசியாக பாரதி யார் முதலிய உண்மை அறிஞர்களையும் உண்மைத் தேசாபிமானிகளையும் மிக வருத் தத்தோடு பிரிந்து சென்னை வந்து சேர்ந்தேன்.